நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகராக இருக்கிறார். ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் அஜீத்குமார் என 4 நட்சத்திர நடிகர்கள்தான் டாப் ஸ்டார் நடிகர்களாக தமிழ் சினிமாவில் உள்ளனர். அதிலும் நடிகர் விஜய் விரைவில் சினிமாவை விட்டு முற்றிலும் ஒதுங்க இருக்கிறார். அதன்பிறகு 3 பேர் மட்டுமே இந்த டாப் லெவல் நடிகர்களாக இருப்பார்கள்.
கடந்த 2023ம் ஆண்டில் வெளியான துணிவு படத்துக்கு பிறகு அஜீத்குமார் நடிப்பில் 2 ஆண்டுகளுக்கு பின் வெளியான படம் விடாமுயற்சி. கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி வெளியான இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி இருந்தார். லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இசையமைத்து இருந்தார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக இருந்தது. பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தை காப்பியடித்து உருவான இந்த படத்தை பார்த்த ரசிகர்கள், மிகவும் அதிருப்தியடைந்தனர். படத்தின் ஹீரோவை கேவலமாக சித்தரித்த பல காட்சிகளை பார்த்து ரசிகர்கள் நொந்து போய்விட்டனர்.
இந்நிலையில் அடுத்ததாக நடிகர் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் வருகிற 10ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தை மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ட் செய்திருக்கிறார். ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
குட் பேட் அக்லி படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. பிறகு ஓஜி சம்பவம் என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடலும், காட் பிளஸ் யூ மாமே என்ற செகன்ட் சிங்கிள் பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்து 3வது சிங்கிள் வருகிற 7ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குட் பேட் அக்லி படத்தின் டிரெய்லர் வெளியானது. தீனா பில்லா வரலாறு உள்ளிட்ட படங்களை மையப்படுத்திய அந்த படங்களை ரெபரென்ஸ் செய்த டிரெய்லர் பட காட்சிகளை பார்த்த ரசிகர்கள், ஏகப்பட்ட உற்சாகத்தில் உள்ளனர். இந்த டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளதாக, படக்குழு தரப்பில் போஸ்டர் வெளியிட்டுள்ளது.இதனால் ஏகே ரசிகர்கள் ஏகப்பட்ட உற்சாகத்தில் உள்ளனர்.





