- Advertisement -
Homeபொழுதுபோக்குபொங்கல் ஸ்பெஷல், போஸ்டர் வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்திய கோட் படக்குழு - இதென்னடா ரசிகர்களுக்கு...

பொங்கல் ஸ்பெஷல், போஸ்டர் வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்திய கோட் படக்குழு – இதென்னடா ரசிகர்களுக்கு வந்த மற்றொரு சோதனை

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது நடித்து வரும் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது சென்னை கோவளத்தில் நடந்து வருகிறது. வரும் மார்ச் இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்து, ஜூன் 13ல் இப்படம் திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த படம் குறித்த அப்டேட்கள் அடிக்கடி வெளிவந்துக்கொண்டே இருந்தாலும், அதுவும் சர்ச்சையாக வெடித்துக்கொண்டே தான் இருக்கிறது. இந்த படத்தின் டைட்டில் பெயர் வெளியானது, ஆங்கில தலைப்பாக இருப்பதால் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். கோட் என்றாலும் ஆடு என பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

- Advertisement -

இதற்கிடையே சமீபத்தில் விஜய் கெட்டப் வெளியாகி, பலரும் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர். அரசியலில் பெரிய இடத்துக்கு வர ஆசைப்படுகிற ஒரு டாப் ஸ்டார் நடிகர் கெட்டப் இப்படியாக இருக்கும், விஜயை இப்படி வெங்கட்பிரபு வச்சு செஞ்சுட்டாரே, என்ற கமெண்ட்டுகளும் அதிகரித்தன.

இதற்கிடையே விஜய் படத்தின் அப்டேட் பொங்கல் அன்று வெளியாகும் என இயக்குநர் வெங்கட்பிரபுவும், ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் கல்பாத்தி அர்ச்சனாவும் ஏற்கனவே தங்களது வலைதள பக்கங்களில் அறிவித்து இருந்தனர். அதனால் பொங்கல் நாளில் போஸ்டர், அல்லது வீடியோ காட்சி எதுவும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் படக்குழு அறிவித்தபடி இன்று கோட் படத்தின் 3வது போஸ்டர் வெளியானது. இதில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆகிய 4 பேரும் துப்பாக்கி பிடித்தபடி சிரித்துக்கொண்டு காட்சியளிக்கின்றனர். போஸ்டர் மாஸ் ஆக இருப்பதால், விஜய் ரசிகர்கள் உற்சாகமாகி அந்த போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர்.

ஆனால் இந்த படத்தை பார்த்தால், படத்தில் வரும் 4 முக்கிய கேரக்டர்களுமே துப்பாக்கிகளோடு காணப்படுவதால், அட இதுவும் ஆக்ஷன் திரில்லர் படம்தானா, என்னடா கொடுமை இது, அப்போ லியோ, விக்ரம், ஜெயிலர், கைதி, கேப்டன் மில்லர் வரிசையில் மற்றொரு துப்பாக்கி சுடும் படமா, என்ன கொடுமை சார் இது என, புலம்பி தீர்க்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்