- Advertisement -
Homeபொழுதுபோக்குநீண்ட இடைவேளைக்குப் பிறகு திரையில் ஜோடி சேரும் காதல் தம்பதி... இங்கு இயக்குனர் யார் என்பது...

நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரையில் ஜோடி சேரும் காதல் தம்பதி… இங்கு இயக்குனர் யார் என்பது தான் ஹைலைட்டே…

- Advertisement -

தமிழ் சினிமாவில் அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா தம்பதிக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. திரையில் ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த அவர்கள், நிஜ வாழ்க்கையிலும் ஒன்றாக சேர்ந்து ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்றனர். இதில் சூர்யா ஜோதிகா தம்பதியரின் கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

 

பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தின் மூலம் இருவரும் ஜோடியாக முதன் முதலில் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனது. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து, சூர்யா ஜோதிகா இருவரும் அடுத்தடுத்து படங்களில் இணைந்து நடிக்க ஆரம்பித்தனர்.

 

இருவரும் வெவ்வேறு திசையில் பயணித்து தங்களது திரையுலக வாழ்க்கையில் உயரத்திற்குச் செல்ல, படப்பிடிப்புக்கு நடுவே இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர், ஜில்லுனு ஒரு காதல் உள்பட ஏழு திரைப்படங்களில் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

 

இந்த நிலையில் இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்க 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், சூர்யா ஜோதிகா தம்பதியருக்கு இடையே திருமணம் நடைபெற்றது. தமிழ்த் திரை உலகைச் சேர்ந்த பலரும், நேரில் சென்று தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்தனர். திருமணம் நடைபெற்ற சமயத்தில், இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்று ஜோதிகா கூறினார்.

 

சொன்னது போலவே அவர் சினிமாவுக்கு முழுக்கு போட்டு இருந்தார். இந்த தம்பதியருக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். இப்படியான சூழலில், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் ஜோதிகா. அவர் திரையுலகிற்கு திரும்பினாலும் திருப்புமுனை கொடுக்கும்படியான திரைப்படங்கள் எதுவும் அமையவில்லை. 36 வயதினிலே திரைப்படம் மட்டும், ஜோதிகாவின் நடிப்பிற்கு சொல்லிக் கொள்ளும் திரைப்படமாக அமைந்தது.

 

இப்படியான சூழலில் தற்போது சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் சேர்ந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சில்லு கருப்பட்டி திரைப்படத்தின் மூலம், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹலிதாசமீம் இந்த திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. அல்லது, பெங்களூர் டேஸ் திரைப்படத்தின் புகழ் அஞ்சலி மேனன் இதனை இயக்கலாம் என்றும் தெரிகிறது. இருவரில் யாரோ ஒருவர் படத்தை இயக்குவது உறுதியாக இருக்கும் சூழலில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சற்று முன்