தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த அதிமுக திமுக அரசுகள் மீது மக்கள் கொண்ட அதிருப்தியும் வெறுப்பும் கடந்த சட்டசபை தேர்தலின் போது தவெகவுக்கு சாதகமாக மாறியது. 108 இடங்களில் மக்கள் அந்த கட்சிக்கு அபாரமான வெற்றியை கொடுத்தனர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான ரீல்ஸ்களை வெளியிட்டு வெளியிட்டு அந்த கட்சி மக்களை வசப்படுத்தியது.
ஆனால் முதல்வர் விஜய் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு அவர்கள் ஆட்சி நடத்துகிற விதமும் சட்டசபையில் காட்டுகிற ஆட்டிட்யூட்டும் மக்களுக்காக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் செய்கிற தகிடுதத்தமும் மோசடிகளும் நம்பி ஓட்டுப் போட்ட மக்களை கடுமையாக ஏமாற்றமடைய செய்து வருகின்றன.
200 யூனிட் மின்சாரம் தருவதாக வாக்குறுதி தந்துவிட்டு மின்கட்டணத்தை 3 மடங்காக உயர்த்தியது, அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம் என கூறிவிட்டு இப்போது குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சம் உள்ளவர்களுக்கு மட்டும் ஆண்டுக்கு 3 சிலிண்டர் என அறிவித்தது பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.
இதே போல் விவசாயிகள் பயிர் கடன்கள் ரத்து மகளிர் இலவச பஸ் பயணம் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மகளிர் உரிம தொகை என எதிலுமே தவெக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதி எல்லாமே சொன்னது ஒன்றாகவும் இப்போது நடப்பதும் வேறாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் அரிசி பருப்பு சர்க்கரை என மளிகை பொருட்களின் விலைவாசி தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு விலைவாசி குறையும், மக்கள் மீது அக்கறை கொண்ட ஒரு அரசாக தவெக இருக்கும் என்று நம்பிதான் விஜய் சொன்ன தேர்தல் வாக்குறுதிகளை நம்பிதான் மக்கள் ஓட்டுப் போட்டார்கள். ஆனால் 3 மாதங்களிலேயே விஜய் ஆட்சியின் அலங்கோலமும் தேர்தல் வாக்குறுதிகளில் தந்த ஏமாற்றங்களும் மக்களை விரக்தியடைய செய்துவிட்டது.
கடந்த 2 ஆண்டுகளாக ரீல்ஸ் போட்டு போட்டு விஜய்க்கு ஆதரவு பேசிய மக்கள் இப்போது விஜய்க்கு எதிராக ரீல்ஸ் போட துவங்கி விட்டனர். எப்போதும் திமுகவையே நொட்டை சொல்லிக்கொண்டு இனியும் எங்களை ஏமாற்ற வேண்டாம். திமுக அதிமுகவை விட மக்களை பொய் வாக்குறுதி தந்து ஏமாற்றுவதில் தவெக தான் முன்னிலையில் உள்ளது. மக்களை நம்ப வைத்து ஏமாற்றுவதில் அதிமுக திமுகவையே தவெக தூக்கி சாப்பிட்டு விடும் என்பது 3 மாதங்களிலேயே தெரிந்துவிட்டது என்று பலரும் ரீல்ஸ் வெளியிட்டு விஜய் ஆட்சியை கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.





