- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயன் படத்தில் திடீரென மாறிப்போன கதாநாயகி... அது சரி இவரு யாருன்னு தெரியுமா...

சிவகார்த்திகேயன் படத்தில் திடீரென மாறிப்போன கதாநாயகி… அது சரி இவரு யாருன்னு தெரியுமா…

- Advertisement -

தளபதி விஜய்யை வைத்து துப்பாக்கி கத்தி என இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தவர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். தொடர்ந்து விஜய்யை வைத்து சர்க்கார் எனும் திரைப்படத்தை எடுத்தார். மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம், தொய்வான திரைக்கதையால் கலவையான விமர்சனத்தை பெற்றது.

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை வைத்து ஸ்பைடர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து தர்பார் என அவர் இயக்கிய இரண்டு திரைப்படங்களும் படு தோல்வி அடைந்தன. இந்நிலையில் தர்பார் தோல்வி குறித்து ஒரு முறை பேசியிருந்த ஏ ஆர் முருகதாஸ், அந்தப் படத்தை எடுக்க போதுமான காலம் கொடுக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் அடுத்த திரைப்படத்திற்கான கதையை, விஜய்க்காக எழுதி வைத்திருந்தார் முருகதாஸ். அதற்கு தளபதியும் ஓகே சொல்ல படத்திற்கான வேலைகள் பரபரத்தன. ஆனால் கடைசி நேரத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக விஜய் அந்த திரைப்படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.

இந்த சமயத்தில் தான், அந்தக் கதையை சிவகார்த்திகேயனிடம் கூறி ஓகே வாங்கி இருக்கிறாராம் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். தற்போது சிவகார்த்திகேயன், தனது 21 வது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ரங்கூன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமிதான் இந்த திரைப்படத்தை எடுத்து வருகிறார். இதனை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

- Advertisement -

முழுக்க முழுக்க ராணுவ பின்னணியை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. திரைப்படத்திற்காக கடும் உடற்பயிற்சிகளை சிவகார்த்திகேயன் செய்திருக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் தொடர்பான டீசர், பதினாறாம் தேதி வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதற்கான பட பூஜை தொடக்க விழா இன்று நடைபெற்றது.

சிவகார்த்திகேயன், ஏ ஆர் முருகதாஸ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர். தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவிஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இதில் முதலில் மிருணால் தாகூர்தான் கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது படத்திற்கான ஹீரோயினை படக்குழு மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி ருக்மணி வசந்த் என்பவர் இந்த திரைப்படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி – ஆறுமுககுமார் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்