- Advertisement -
Homeபொழுதுபோக்கு18 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் படத்திற்கு இசையமைக்கிறேன்... குட் பேட் அக்லி இந்த திரைப்படங்கள் மாறி...

18 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் படத்திற்கு இசையமைக்கிறேன்… குட் பேட் அக்லி இந்த திரைப்படங்கள் மாறி தான் இருக்கும்… சூப்பராக கூறிய ஜிவி பிரகாஷ்

- Advertisement -

தமிழ் சினிமா தற்போது எதிர்பார்த்து இருக்கும் திரைப்படங்களில் மிக முக்கியமானது அஜித் குமாரின் குட் பேட் அக்லி. மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார். தெலுங்கில் புகழ்பெற்ற மைத்திரி மூவிஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இதன் மூலம் தமிழ் சினிமாவுக்கும் இந்த நிறுவனம் அறிமுகம் ஆகிறது.

இதில் கதாநாயகியாக திரிஷா வருகிறார். பிரசன்னா அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் இடம் பெற்று இருக்கிறார்கள். தெலுங்கு நடிகர் சுனிலுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி படத்தின் பாடல்களுக்கும் அவர் இசையமைத்துக் கொடுத்தார். பிறகு தயாரிப்பு நிறுவனத்திற்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக, படத்திலிருந்து தேவி ஸ்ரீ பிரசாத் வெளியேற, அவருக்கு பதில் பின்னணி இசைக்காக சேர்க்கப்பட்டார் ஜிவி பிரகாஷ். தற்போது அதன் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்தத் திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுவதற்கு மிக முக்கிய காரணம் ஆதிக் ரவிச்சந்திரன் தான். வேறு எந்த திரைப்படத்திலும் இல்லாத வகையில் அஜித்குமாரை, தர லோக்கலாக அவர் காட்டியிருப்பது படத்தின் போஸ்டர்களின் மூலமே நமக்கு தெரிய வந்தது.

குறிப்பாக அஜித்குமார் நடுவிரலை காட்டிக் கொண்டு இருக்கும் போஸ்டரை பார்த்து பலரும் ஆச்சரியமடைந்தார்கள். வரும் ஏப்ரல் பத்தாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. குட் பேட் அக்லியில், சிம்ரன் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. அவர் கேமியோ ரோலில் வந்து போகிறாராம். இந்த நிலையில் படம் குறித்து பேசி இருக்கும் ஜிவி பிரகாஷ்,

18 ஆண்டுகளுக்குப் பிறகு நான் அஜித் குமார் திரைப்படத்திற்கு இசையமைக்கிறேன். இதற்கு முன்னதாக ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைந்து, திரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் மார்க் ஆண்டனி ஆகிய திரைப்படங்களில் பணிபுரிந்து இருக்கிறேன். படத்திற்காக மாஸாக வருகிறோம். எப்படி பேட்ட, விக்ரம் போன்ற திரைப்படங்கள் ஃபேன் பாய் படமாக இருந்ததோ அதே போல் தான் இந்த குட் பேட் அக்லியும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

சற்று முன்