- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சூர்யாவுக்கு பதிலாக அவரது தம்பி கார்த்தி படத்தை இயக்க தயாரான எச் வினோத் -...

நடிகர் சூர்யாவுக்கு பதிலாக அவரது தம்பி கார்த்தி படத்தை இயக்க தயாரான எச் வினோத் – இதுதான் காரணமா? அப்போ தீரன் அதிகாரம் 2 தானா?

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை எச் வினோத் இயக்கினார். ஆனால் அந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே இணையத்தில் வெளியாகி விட்டது. இது படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் எச் வினோத் உள்ளிட்ட படக்குழுவுக்கு பலத்த ஏமாற்றம் அதிர்ச்சி தந்த நிலையில் வருகிற 24ம் தேதி ஜனநாயகன் படம் திரைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே நடிகர் தனுஷ் நடிக்கும் ஒரு படத்தை எச் வினோத் இயக்க பேச்சுவார்த்தை நடந்தது. மேலும் யோகிபாபு நடிக்கும் ஒரு படத்தை இயக்கவும் எச் வினோத் திட்டமிட்டு இருந்தார். இந்த சூழலில் நடிகர் சூர்யாவுக்கு எச் வினோத் கதை சொன்ன நிலையில் அவரும் ஓகே சொல்லி இருந்தார்.

- Advertisement -

ஆனால் இப்போது வந்த லேட்டஸ்ட் தகவலின்படி நடிகர் கார்த்தி நடிக்கும் படத்தை தான் முதலில் எச் வினோத் டைரக்ட் செய்ய இருக்கிறார். அதாவது கருப்பு படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு டிஜிட்டல் ரைட்ஸ் சாட்டிலைட் ரைட்ஸ் விற்பனையும் நடக்கவில்லை.

அதனால் அந்த படத்தின் நிறுவனம் உடனடியாக ஒரு படத்தை துவங்க திட்டமிட்ட நிலையில், சூர்யா ஏற்கனவே கமிட் ஆன படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவரால் கால்ஷீட் ஒதுக்க முடியாத சூழலில் அவரது தம்பி கார்த்தியை வைத்து ஒரு படம் தயாரிக்கவும் அந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்கவும் இப்போது முடிவாகி உள்ளது.

- Advertisement -

நடிகர் கார்த்தி – இயக்குனர் எச் வினோத் கூட்டணியில் ஏற்கனவே வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் தீரன் அதிகாரம் 1. அந்த படத்தின் 2ம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் வெகு ஆவலாக உள்ள நிலையில் இப்போது உருவாகும் இந்த படம் தீரன் அதிகாரம் படத்தின் 2ம் பாகமாக தான் இருக்கும் என்கிற ஒரு தகவலும் வெளியாகி உள்ளது.

அண்ணன் சூர்யாவை இயக்கச் சென்ற இயக்குனர் எச் வினோத்துக்கு இப்போது அவரது தம்பி கார்த்தியை வைத்து படம் இயக்கும் சூழல் உருவாகி உள்ளது. அப்படி இருந்தாலும் தீரன் அதிகாரம் 2 படமாக இது உருவாகும் நிலையில் கார்த்திக்கும் எச் வினோத்துக்கும் மீண்டும் ஒரு அதிரிபுதிரியான வெற்றிப் படமாக இது அமையும் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்