- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் அவரை கொடுமைப்படுத்தினேனா? என் மீது அவர் பழி சுமத்த அதுதான் காரணம் - நடிகை...

நான் அவரை கொடுமைப்படுத்தினேனா? என் மீது அவர் பழி சுமத்த அதுதான் காரணம் – நடிகை ஹன்சிகா மோத்வானி, நாத்தனார் மீது கோர்ட்டில் வழக்கு!

- Advertisement -

மும்பையில் இருந்து தமிழ் படங்களில் நடிக்க வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. சின்ன குஷ்பு என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர். தமிழில் விஜய் தனுஷ் ஜெயம் ரவி சிவகார்த்திகேயன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார். கவர்ச்சியான கேரக்டர்களில் அவரது நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

புலி வேலாயுதம் அரண்மனை 2 எங்கேயும் காதல் ஒரு கல் ஒரு கண்ணாடி மாப்பிள்ளை போகன் சிங்கம் 2 மான் கராத்தே உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக ஹன்சிகா மோத்வானி நடித்திருக்கிறார். தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட ஹன்சிகா மோத்வானி, திருமணத்துக்கு பிறகும் சில படங்களில் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

நடிகை ஹன்சிகா மோத்வானியின் அண்ணன் பிரசாந்த் மோத்வானி டிவி சீரியல் நடிகையான முஸ்கான் நான்சி என்பவரை கடந்த 2020ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் அவர்களது மண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்த நிலையில், அதன்பிறகு கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து தனியே வாழ்ந்து வருகின்றனர்.

இந்த சூழலில் நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது அம்மா மீது அவரது அண்ணி முஸ்கான் நான்சி குடும்ப வன்முறை குறித்து புகார் அளித்திருந்தார். இதில் தன் கணவருடன் சேர்ந்து வாழ விடாமல் ஹன்சிகா மோத்வானியும் அவரது அம்மாவும் தனக்கு இடையூறாக இருப்பதாகவும் தன்னை அவர்கள் கொடுமைப்படுத்தியதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து நடிகை ஹன்சிகா மோத்வானி தரப்பிடம் விசாரணை நடத்தி பதில் அளிக்குமாறு, மும்பை போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் நடிகை ஹன்சிகாவும் முஸ்கான் நான்சிக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்து மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், எனது சகோதரனின் மனைவி முஸ்கான் நான்சி, வேண்டும் என்றே என் மீது பழி சுமத்தியுள்ளார். என் சகோதரர் பிரசாந்த் மற்றும் முஸ்கான் நான்சி திருமணத்திற்காக நான் 27 லட்சம் ரூபாய் கடன் வாங்கிதான் செலவு செய்தேன். அந்த பணத்தை முஸ்கானிடம் திருப்பி கேட்டதற்காக நான் அவரை கொடுமைப்படுத்தியதாக கூறி அவர் என் மீது பொய்யான புகார் கொடுத்துள்ளார் என்று நடிகை ஹன்சிகா மோத்வானி அந்த மனுவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்