- Advertisement -
Homeபொழுதுபோக்குதயவுசெஞ்சு இந்த கதையை சரத்குமாரை வெச்சு எடுக்கவே வேண்டாம், தயாரிப்பாளரிடம் வற்புறுத்தியது ஏன்? - ஓபனாக...

தயவுசெஞ்சு இந்த கதையை சரத்குமாரை வெச்சு எடுக்கவே வேண்டாம், தயாரிப்பாளரிடம் வற்புறுத்தியது ஏன்? – ஓபனாக பேசிய இயக்குனர் விக்ரமன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சூர்யவம்சம் புது வசந்தம் வானத்தை போல பூவே உனக்காக உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் விக்ரமன் கூறியதாவது, வானத்தை போல படத்தின் கதையை முதலில் சரத்குமாரிடம் சொன்னேன். அவருக்கு ரொம்பவும் கதை பிடித்து விட்டது.

பாஸ் சூப்பரா இருக்குது பாஸ். இதில் வயதான அண்ணனாகவும் நானே நடிக்கிறேன். தம்பி கேரக்டரிலும் நானே நடிக்கிறேன் என்றார். ஆனால் நாட்டாமை படத்தில் கம்பீரமாக நடித்துள்ளீர்கள். இந்த படத்தில் வயதான தோற்றத்தில் மிகவும் மென்மையான கேரக்டரில் அண்ணனாக நடிக்க வேண்டும். உங்கள் ரசிகர்களுக்கு இது பிடிக்காது. அதே கம்பெனி எடுக்கிற அடுத்த படம்.

- Advertisement -

நாட்டாமை படம் பார்த்துட்டு இந்த படத்துலேயும் டபுள் ரோல் என்றால் ரசிகர்கள் உங்களை அதே மாதிரி எதிர்பார்த்துட்டு தியேட்டருக்கு வருவாங்க. அதுல சாப்ட் ஆன கேர்டர் என்றால் அதுவே ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஆயிடும். பெரிய ஏமாற்றத்தை தந்திடும். அது வேண்டாம் என்று நான் சொல்லிட்டு வந்துட்டேன்.

ஏனென்றால் அது இந்த படத்துக்கு எனக்கு ஒப்பவே இல்லை. சரத்குமாரை வைத்து வானத்தை போல படம் பண்ண வேண்டாம் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். 2 நாள் கழிச்சு தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரி கிட்ட போய், சார் இந்த கதை தான் பண்ணனும் என்றால் அது சரத்குமாரை வைத்து வேண்டாம். சரத்குமார் தான் வேண்டும் என்றால் வேறு கதையை யோசிங்க என்றேன்.

- Advertisement -

வேறு கதை இருக்கிறதா என்று அவர் என்னிடம் கேட்டார். இருக்கு சார். ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி யோசிச்ச ஒரு கதை என்கிட்ட இருக்குது. விஜயகுமார் மாதிரி ஒரு அப்பா. சரத்குமார் மாதிரி ஒரு பையன். சூர்யவம்சம் படத்தோட பழைய கதையை அப்படியே சொல்றேன். அதை கேட்டதும் அவர் சூப்பரா இருக்கே, இந்த படத்தை பண்ணிடலாம் என்று சொல்லிவிட்டார்.

அப்போது எதுக்கு அப்பா ரோல் விஜயகுமாரை நடிக்க வைக்கறீங்க? அதுவும் சரத்குமாரையே நடிக்க வைங்க. டூயல் ரோல் படம் நல்லா இருக்குமே என்றார். அதுகூட எனக்கு ஓகே தான் என்றேன். அப்புறம் சரத்குமார் கிட்ட போய் சூர்யவம்சம் கதையை சொன்னேன். அவரும் ஓகே சொல்லிட்டார். அப்படி தான் சூர்யவம்சம் படம் உருவானது என்று இயக்குனர் விக்ரமன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்