- Advertisement -
Homeபொழுதுபோக்குரத்னம் திரைப்படத்திற்கு பிறகு இந்த விஷயத்தில் இறங்க போகிறேன்... அடித்துக் கூறிய இயக்குனர் ஹரி... அசந்து...

ரத்னம் திரைப்படத்திற்கு பிறகு இந்த விஷயத்தில் இறங்க போகிறேன்… அடித்துக் கூறிய இயக்குனர் ஹரி… அசந்து போன ரசிகர்கள்…

- Advertisement -

இயக்குனர் ஹரி தற்போது ரத்னம் திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார். விஷால் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருக்கிறார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் சூட்டிங்கை முடித்திருக்கிறார் ஹரி. வழக்கம்போல சொன்ன தேதியில் படத்தை எடுத்து முடித்து இயக்குனர் அசத்தியிருப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

- Advertisement -

எப்போதும் ஆக்சன் திரைப்படங்களை கொடுத்து கமர்சியல் கிங்காக வலம் வரும் ஹரி இந்த திரைப்படத்திலும் அதை செய்திருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே இதற்கு முன்னதாக விஷாலுடன் இணைந்து இரண்டு திரைப்படங்களை சரி இயக்கியிருக்கிறார். இதில் தாமிரபரணி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அதிலும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அந்த திரைப்படத்தை ஹரி கொடுத்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஷாலுடன் மீண்டும் இணைந்து பூஜை படத்தை அவர் இயக்கி இருந்தார். இதுவும் கமர்சியல் எலமெண்டாக எடுக்கப்பட்டு ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

- Advertisement -

தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களை இயக்கிய ஹரிக்கு, சில திரைப்படங்கள் தோல்வியையும் கொடுத்தன. அதிலும் குறிப்பாக மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட சாமி ஸ்கொயர், படு தோல்வியை சந்தித்தது. இயக்குனர் ஹரியா இப்படி எடுத்திருப்பது என்று ரசிகர்கள் கேள்வி கேட்கும் அளவுக்கு அந்த திரைப்படம் இருந்தது. அதிலிருந்து மீண்டு வர தனது மைத்துனர் அருண் விஜயை வைத்து யானை திரைப்படத்தை ஹரி இயக்கினார்.

வழக்கமான தனது கதையையே அவர் உல்டா செய்து இந்த படத்தை இயக்கியிருந்தார். இருப்பினும் விறுவிறுப்பான திரைக்கதையால் இந்த திரைப்படம் வெற்றி பெற்றது. இப்படியான சூழலில் தற்போது ரத்னம் திரைப்படத்தை இயக்கியிருக்கும் அவர் அடுத்ததாக, ஒரு போலீஸ் கதையை இயக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் இது சிங்கம் படத்தின் நான்காம் பாகமாக இருக்காது என்றும் உறுதியுடன் கூறி இருக்கிறார். அனேகமாக இது திரைப்படத்தில் சூர்யா தான் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்