- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது, படத்துல ஒரு சீன் கூட அவரை காட்டலையா, இப்படி இயக்குநர் பழசை மறக்கலாமா?...

என்னது, படத்துல ஒரு சீன் கூட அவரை காட்டலையா, இப்படி இயக்குநர் பழசை மறக்கலாமா? – சமூக வலைதளங்களில் கடுப்பான ரசிகர்கள்

- Advertisement -

தமிழ் சினிமாவில் 73 வயதுகளை கடந்தும், இன்றும் ரஜினி படங்கள் என்றாலே, ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரஜினி மீது கொண்டிருக்கும் ஈர்ப்பு அளப்பரியது. சமீபத்தில் வந்த ஜெயிலர் படம், பிளாக் பஸ்டர் மூவியாக ஹிட் ஆக ஒரே ஒரு முக்கிய காரணம் என்றால் அது ரஜினிதான். ரஜினியை தவிர்த்து வேறு யார் நடித்திருந்தாலும் இவ்வளவு மாஸ் ஹிட் எதிர்பார்த்திருக்க முடியாது.

கடந்த 18 ஆண்டுகளுக்கு, இதே ஒரு மாஸ் வெற்றியடைந்த படம்தான் சந்திரமுகி. வழக்கமாக அண்ணாமலை, பாட்ஷா, முத்து என தனது கேரக்டர் பெயரில் படங்களில் நடித்த ரஜினி, இந்த படத்தில் கதாநாயகியின் முக்கியத்துவம் உணர்ந்து, சந்திரமுகி என பெயர் வைக்க சம்மதித்தார்.

- Advertisement -

பி.வாசு இயக்கத்தில் வெளியான இந்த படம், மணிச்சித்ரதாழ் என்ற மலையாளப் படத்தின் தழுவலாகும். மோகன்லால், சுரேஷ் கோபி, ஷோபனா நடித்த இந்த படத்தை அப்படியே தமிழ் சினிமாவுக்கேற்ப மாற்றி, மோகன்லால் கேரக்டரில் ரஜினியும், சுரேஷ்கோபி கேரக்டரில் பிரபுவும், ஷோபனா கேரக்டரில் ஜோதிகாவும் நடித்திருந்தனர்.

மாஸ் ஹிட் ஆன இந்த படத்தின் பாடல்களும், செம டிரண்டிங் ஆகின. இதில் வேட்டையன் என்ற சிறப்பு தோற்றத்தில், ரஜினி ஒரு காட்சியில் வந்தாலும் படத்துக்கு செம வெயிட்டான காட்சியாக அது அமைந்தது. சந்திரமுகியால் பாதிக்கப்பட்ட பெண்ணாக, பிரபுவின் நடிகையாக ஜோதிகா, ரசிகர்களை மிரட்டி இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில், இப்போது சந்திரமுகி 2 என்ற பெயரில் பி.வாசு இயக்கத்தில் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் நேற்று படம் ரிலீஸ் ஆனது. ராகவா லாரன்ஸ் நடிப்பு மட்டுமே சிறப்பு என்று கூறப்பட்ட நிலையில், படம் குறித்து ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக, சந்திரமுகி படத்தின் வெற்றிக்கு வித்திட்டவரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். அவரை படத்தில், ஒரு காட்சியில் கூட காட்டவில்லை. வடிவேலு காமெடியும் எடுபடவில்லை. அந்த படத்துடன் இந்த படத்தை எதற்காகவும் ஒப்பிடக் கூடாது. இந்த படத்தில் லாஜிக்கே இல்லை எனவும் விமர்சித்துள்ளனர். அதுவும் ரஜினி படத்தின் 2ம் பாகத்தில், ரஜினியை ஒரு காட்சியில் கூட காட்டாமல், பி.வாசு பழைய சந்திரமுகியை மறந்தது ஏன் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்