- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷ் படத்தால் இத்தனை கோடிகள் நஷ்டமா? அப்செட் ஆன தயாரிப்பாளர் - கர படம்...

நடிகர் தனுஷ் படத்தால் இத்தனை கோடிகள் நஷ்டமா? அப்செட் ஆன தயாரிப்பாளர் – கர படம் குறித்து வெளியான முக்கிய தகவல்!

- Advertisement -

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். பாடகர் தயாரிப்பாளர் என இருந்த தனுஷ் இப்போது டைரக்டராகவும் மாறி இருக்கிறார். ப பாண்டி ராயன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இட்லி கடை என 4 படங்களை நடிகர் தனுஷ் டைரக்ட் செய்திருக்கிறார். இதில் ராயன் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது.

கடந்தாண்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா படம் தெலுங்கில் நல்ல வசூலை குவித்தது. தமிழில் எதிர்பார்த்த வசூல் இல்லை. அதே போல் இட்லி கடை படமும் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. வணிக ரீதியாகவும் பெரிய வசூல் இல்லை.

- Advertisement -

இந்நிலையில் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்த கர படத்தில் தனுஷ் நடித்திருந்தார். போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இந்த படத்தை டைரக்ட் செய்திருந்தார். கடந்த வாரம் வெளியான இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் எப்போது ஒரு ஹீரோவுக்கு 3 படங்கள் என கமிட் செய்வது வழக்கம். அந்த வகையில் நடிகர் சிம்பு நடிகர் ஜெயம் ரவி படங்கள் கமிட் ஆகி பெரிய பிரச்னைகளை அவர் சந்தித்தார். இப்போது தனுஷ் நடிக்கும் 3 படங்களை ஐசரி கணேஷ் கமிட் செய்த நிலையில் தனுஷ் நடித்த கர படமே பெரிய நஷ்டத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷூக்கு தந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

தனுஷ் நடித்த கர படம் மொத்தம் 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த படம் போதிய வசூலை எட்டாத நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷூக்கு 35 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் மிகவும் அப்செட்டில் இருந்துள்ளார். இந்த தகவல் நடிகர் தனுஷ் காதுகளுக்கு சென்றுள்ளது.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இன்னும் 2 படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ள நிலையில் முதல் படம் கர இப்படி ஒரு பலத்த நஷ்டத்தை தந்துள்ள நிலையில் மற்ற 2 படங்களும் நிறைய நஷ்டத்தை தருமோ என்கிற கவலையில் தயாரிப்பாளர் இருந்து வருகிறார். இந்த தகவலை அறிந்த நடிகர் தனுஷ், தொடர்ந்து அவரது தயாரிப்பில் நடிப்பாரா என்பது சந்தேகமாக மாறியுள்ளது.

- Advertisement -

சற்று முன்