- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ லோகேஷ் கனகராஜ் படமா?.. யோவ் எதாவது வாய்ல வந்துட போகுது.. பங்கம் செய்த பயில்வான்...

லியோ லோகேஷ் கனகராஜ் படமா?.. யோவ் எதாவது வாய்ல வந்துட போகுது.. பங்கம் செய்த பயில்வான் ரங்கநாதன்

- Advertisement -

லியோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. முதல் காட்சியை பார்த்த விஜய் ரசிகர்கள் படம் சூப்பராக வந்திருக்கிறது என்று பூரிப்புடன் கூறிவருகின்றனர். ஆனால் பொதுவான ரசிகர்களோ படம் தங்களை திருப்திப்படுத்தவில்லை என்று போட்டு உடைத்திருக்கின்றனர். முதல் நாள் முடிந்திருக்கும் சூழலில் படத்துக்கு கலவையான விமர்சனங்களே வந்திருப்பதால் இனி வரும் நாட்களில் படம் தப்பிக்குமா என்ற கேள்வி பலரிடம் எழுந்திருக்கிறது.

இந்நிலையில் லியோ படத்திற்கு பயில்வான் ரங்கநாதன் தனது விமர்சனத்தை கொடுத்திருக்கிறார். அவர் தனது விமர்சனத்தில், “லியோ திரைப்படம் கிட்டத்தட்ட பாட்ஷா படம் போல்தான் இருக்கிறது. அந்தப் படத்தில் தாதாவாக இருந்த ரஜினி சாதாரண ஆட்டோ ஓட்டுநராக இருப்பார். இதில் விஜய் காஷ்மீரில் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருப்பதால் த்ரிஷா இழுத்து போர்த்திக்கொண்டு நடித்திருக்கிறார்.

த்ரிஷாவின் கவர்ச்சி இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றனர். மற்ற திரைப்படங்களைவிடவும் இந்தத் திரைப்படத்தில் விஜய் அட்டகாசமாக நடித்திருக்கிறார். அதேபோல் ஆக்‌ஷன் ஹீரோ என்றால் அது விஜய்தான் என்பதை மீண்டும் அவர் நிரூபித்திருக்கிறார். சண்டை காட்சிகளில் எல்லாம் அதிரிபுதிரி செய்துவிட்டார். ஒவ்வொரு சண்டை காட்சியும் வித்தியாசமாகவே இருக்கிறது. இதனால் விஜய்க்கு ஒரு கம்பீரம் கிடைத்திருக்கிறது.

இப்படத்தில் ஆக்‌ஷன் ஹீரோ என்ற சிம்மாசனத்தில் கம்பீரமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறார் விஜய். இமாச்சல பிரதேசத்தில் 40 நாட்கள் ஷூட்டிங் நடந்திருக்கிறது. அந்த இடத்தில் நிறைய அழகான இடங்கள் இருக்கும்போது பங்களாவையும் பள்ளிக்கூடத்தை மட்டுமே காட்டியிருக்கிறார்கள். அது இயல்பாகவே இல்லை. தயாரிப்பாளர் லலித்குமாரின் பணத்திற்கு வேட்டு வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

படத்தில் எந்தப் புதுமையும் இல்லை. லியோவில் லோகேஷ் கனகராஜ் தனது புத்தி கூர்மையை அதிகமாகவும், ஆழமாகவும் பயன்படுத்தவில்லை. ஸ்க்ரீன்ப்ளே நன்றாக இருந்தாலும் புதுமையாக இல்லை. விறுவிறுப்பு இருக்கு பரபரப்பு இருக்கு ஆனால் புதுமைதான் இல்லை. இது லியோ படத்துக்கு நேர்ந்த மிகப்பெரிய குறை.

இந்தப் படத்தை நாம் பார்ப்பதற்கு காரணமே சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் மாஸ்டர்ஸ்தான். சண்டை படம் உங்களுக்கு பிடிக்கும் என்றால் இந்தப் படமும் உங்களுக்கு பிடிக்கும். ஆனால் ஒன்று இதை யாராவது லோகேஷ் கனகராஜ் படம்னு சொன்னீங்க.. நல்லா வாய்ல வந்துடும்” என்று காட்டமாக முடித்தார்.

சற்று முன்