- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ படத்தில் நடித்ததற்காக சஞ்சய் தத் பெற்ற சம்பளம் இவ்வளவா?.. அடேங்கப்பா

லியோ படத்தில் நடித்ததற்காக சஞ்சய் தத் பெற்ற சம்பளம் இவ்வளவா?.. அடேங்கப்பா

- Advertisement -

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் லியோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. ரசிகர்கள் படு உற்சாகத்தோடு தியேட்டருக்கு சென்று தியேட்டரை திருவிழா கோலம் காண செய்தனர். பட்டாசு வெடிப்பது, கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தது என்று வழக்கமான கொண்டாட்ட முறைகளை தவிர்க்காமல் செய்தனர்.

கொண்டாட்டங்களை முடித்துவிட்டு முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் படம் தங்களுக்கு திருப்தியை கொடுத்திருப்பதாக பேரானந்தத்துடன் தெரிவித்திருக்கின்றன. அதிலும் முதல் பாதி அட்டகாசமாக இருந்தது இரண்டாம் பாதி அதைவிட சூப்பராக இருந்ததாக தெரிவித்தனர். அதுமட்டுமின்றி விஜய்யின் நடிப்பு மற்ற படங்களைவிடவும் வித்தியாசமாக இருந்ததாகவும் கூறினர்.

- Advertisement -

லோகேஷ் கனகராஜின் மேக்கிங்கும் அவர் பிடித்த லொக்கேஷனும் அட்டகாசம். ஹைனா சண்டை காட்சியை எல்லாம் அதகளமாக எடுத்திருப்பதாகவும் ரசிகர்கள் சிலாகித்தனர். ஆனால் பொதுவான ரசிகர்களின் பார்வையோ வேறு மாதிரி இருக்கிறது. படத்தில் ஒன்றுமே இல்லை. பழைய கதைதான் அதை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ் என்று சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர்.

அதுமட்டுமின்றி Leo Disaster என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் என்னது இது லியோ படம் ஹிட்டா இல்லை ஃப்ளாப்பா என்ற குழப்பத்திலேயே இருக்கின்றனர். ஆகமொத்தம் முதல் நாள் முடிவில் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்திருக்கின்றன. இதற்கிடையே படத்தில் விஜய் நடிப்பை தவிர்த்து சஞ்சய் தத், அர்ஜுன் மிரட்டியிருக்கிறார்கள் என்கின்றனர் படம் பார்த்தவர்கள்.

- Advertisement -

குறிப்பாக சஞ்சய் தத் கேஜிஎஃப் 2வுக்கு பிறகு தரமாக நடித்திருக்கிறார். இன்னும் சில வருடங்கள் தமிழ் சினிமா இவரையே மெயின் வில்லனாக பயன்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என கூறுகின்றனர். இந்நிலையில் அவர் லியோவில் நடித்ததற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவர் இப்படத்தில் நடித்ததற்காக எட்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

லியோ படத்தில் அவரது நடிப்பு பலத்த வரவேற்பை பெற்றிருக்கும் சூழலில் அடுத்ததாக அவர் அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடிக்கவிருப்பதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. லியோ போல் விடாமுயற்சியிலும் சஞ்சய் தத் கலக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -

சற்று முன்