- Advertisement -
Homeபொழுதுபோக்குஜவான் படம் எப்படி இருக்கு.. வெளியானது முதல் விமர்சனம்.. அட்லீ சம்பவம் லோடிங்.. படம் மெகா...

ஜவான் படம் எப்படி இருக்கு.. வெளியானது முதல் விமர்சனம்.. அட்லீ சம்பவம் லோடிங்.. படம் மெகா ஹிட்தான் போல

- Advertisement -

ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அட்லீ தமிழில் இதுவரை நான்கு படங்களை இயக்கியிருக்கிறார். அவற்றில் மூன்று படங்கள் விஜய்யை வைத்து இயக்கியிருக்கிறார். அடுத்த படத்தையும் விஜய்யை வைத்தே அட்லீ இயக்குவார் என்றுதான் கோடம்பாகத்தில் டாக் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஷாருக்கானை வைத்து படம் இயக்க கமிட்டானார் அட்லீ.

அதன்படி படத்துக்கு ஜவான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஷாருக்குடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்க அனிருத் இசையமைத்திருக்கிறார். ஷாருக்கானே படத்தையும் தயாரித்திருக்கிறார். படமானது சில வருடங்கள் ஷூட்டிங்கிற்கு பிறகு செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகவிருக்கிறது.

- Advertisement -

ஷாருக்கான் நடிப்பில் இதற்கு முன்னதாக வெளியான பதான் படம் மெகா ஹிட்டாகி ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்தது. எனவே இந்தப் படமும் 1000 கோடி க்ளப்பில் சேர வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறார் ஷாருக்கான். அதற்காக பல விஷயங்களில் இறங்கிவந்திருக்கிறார் அவர். குறிப்பாக தமிழ்நாட்டில் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நடத்தப்பட்டதற்கு காரணமே தமிழ்நாட்டிலும் தன்னுடைய மாஸை தொடர்ந்து காண்பிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

ஏனென்றால் பாலிவுட்டில் தற்போது எடுக்கப்பட்டு வரும் படங்கள் அனைத்துமே தோல்வியில்தான் முடிகின்றன. அதேசமயம் ஹிந்தியில் தென்னிந்திய படங்கள் ரூல் செய்ய ஆரம்பித்திருக்கின்றன. அந்த மீட்டரை பிடித்த அவர் தொடர்ந்து தென்னிந்திய மொழி இயக்குநர்களுடன் படம் செய்ய ஆசைப்படுவதாகவும் அதற்கான முதல் படிதான் இது என்றும் கூறுகிறார்கள் திரைத்துறையினர்.

- Advertisement -

படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே இருக்கின்றன. படக்குழு எதிர்பார்த்தபடியே படத்தின் டிக்கெட் முன் பதிவு ஜோராக நடந்துவருகிறது. இதுவரை ப்ரீ புக்கிங்கிலேயே கோடிகளை சம்பாதித்துவிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி ஜவான் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியிருக்கிறது. அதனைப் பார்த்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

அந்த விமர்சனத்தில், “ஜவான் படம் காமெடி, ஆக்‌ஷன், த்ரில்லர் என அனைத்தும் கலந்த ஒரு பேக்கேஜாக வந்திருக்கிறது. இருக்கையின் நுனியில் அமர்ந்து படம் பார்க்கும் அளவு அட்லீயின் இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவும் மிகவும் அருமையாக இருக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து பாலிவுட்டில் அட்லீ அழுத்தமாக தடம் பதித்துவிட்டார் என அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -

சற்று முன்