- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ செகண்ட் சிங்கிள் தாமதம்.. எல்லாத்துக்கும் அனிருத்தான் காரணமா?.. முழு விவரம் உள்ளே

லியோ செகண்ட் சிங்கிள் தாமதம்.. எல்லாத்துக்கும் அனிருத்தான் காரணமா?.. முழு விவரம் உள்ளே

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய். காஷ்மீரில் தொடங்கிய ஷூட்டிங் சென்னை, திருப்பதி உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்தது. இதனையடுத்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது தொடங்கியிருக்கின்றன. அதன்படி பேட்ச் ஒர்க்குக்காக தனது கேமராமேனுடன் கடந்த மாதம் காஷ்மீருக்கு லோகேஷ் கனகராஜ் சென்றதாக கூறப்பட்டது.

இதற்கிடையே விஜய்யும் தனது 68ஆவது படத்தின் ஆரம்பகட்ட பணிகளுக்காக வெங்கட் பிரபுவுடன் அமெரிக்கா சென்றிருந்தார். அந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு சமீபத்தில் சென்னை திரும்பியிருக்கும் அவர் விரைவில் லியோ படத்தின் டப்பிங் பணிகளை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனி வந்துகொண்டே இருக்கும் என இயக்குநரும் தெரிவித்திருந்தார்.

அதன்படி படத்தின் தெலுங்கு போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அடுத்ததாக கன்னட போஸ்டர் நேற்று முன் தினம் வெளியானது. இதனையடுத்து ஹிந்தி போஸ்டர் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால் விஜய் ஆண்டனி மகள் உயிரிழந்ததால் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும் செப்டம்பர் 30ஆம் தேதி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலைமை இப்படி இருக்க லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியிருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக இருந்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகாததால் அதுகுறித்த கேள்விகளை அவர்கள் எழுப்ப தொடங்கியிருக்கின்றனர்.

இந்நிலையில் லியோ செகண்ட் சிங்கிள் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி செகண்ட் சிங்கிள் வெளியீட்டுக்கு தாமதத்திற்கு காரணம் இன்னும் அனிருத்திடமிருந்து பாடல் படக்குழுவுக்கு வந்து சேரவில்லை. இன்னும் சில பணிகள் பாடலில் மிச்சம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் பாடல் வந்து சேர்ந்துவிடும் என்றும், அடுத்த வாரம் கண்டிப்பாக பாடல் வெளியாகும்; எந்த தேதி என்ற அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வரும் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக லியோவின் முதல் சிங்கிள் கடந்த ஜூன் மாதம் வெளியானது. அது வரவேற்பைப் பெற்றாலும் விமர்சனத்தை கடுமையாக சந்தித்தது. இதனையடுத்து சில வரிகளை தணிக்கை குழு நீக்கியுள்ளது. எனவே இந்தப் பாடலும் அதுமாதிரியான எந்த சர்ச்சையையும் சந்தித்திடக்கூடாது என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

சற்று முன்