- Advertisement -
Homeபொழுதுபோக்குபெரியவரு இருக்காரு அதெல்லாம் செய்யக்கூடாது.. சிவாஜியை பார்த்து பம்மிய ரஜினிகாந்த்

பெரியவரு இருக்காரு அதெல்லாம் செய்யக்கூடாது.. சிவாஜியை பார்த்து பம்மிய ரஜினிகாந்த்

- Advertisement -

இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருப்பவர் ரஜினிகாந்த். எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமா மீது இருக்கும் ஆர்வத்தின் துணையோடு மட்டுமே இண்டஸ்ட்ரிக்குள் வந்து வென்று காட்டியவர். அவரது ஆரம்ப காலத்தில் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தவர். ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாதவர் நடிப்பில் கவனம் செலுத்தி முன்னேறி இப்போது சூப்பர் ஸ்டார் என்ற நாற்காலியை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்.

ரஜினிகாந்த் கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்தாலும் அவருக்குள் மிகச் சிறந்த நடிகர் ஒருவர் இருக்கிறார் என்பதை 70களில் இருந்து 90கள்வரை வெளியான படங்கள் உணர்த்திக் கொண்டிருந்தன உதாரணமாக ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், ஜானி உள்ளிட்ட படங்களை கூறலாம். ஒருகட்டத்துக்கு மேல் கமர்சியல் பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டவர் அதில் தனது தனித்துவமான ஸ்டைலையும் பாடி லாங்குவேஜ் டயலாக் டெலிவரியையும் புகுத்தி நம்பர் ஒன் என்ற இடத்தை அடைந்திருக்கிறார்.

ரஜினிகாந்த் நடிப்புக்கு எவ்வளவு பேர் ரசிகர்களாக இருக்கின்றனரோ அதேபோல் அவரது நடவடிக்கைகளுக்கும், செயல்களுக்கும் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். முக்கியமாக தன்னடக்கத்துடன் மேடையில் பேசுவதும், எதார்த்தமாக பிறருடன் பழகுவதும் என ரஜினிகாந்தின் செயல்கள் அனைத்தும் அப்ளாஸ் அள்ளக்கூடியவை.அதேபோல் தன்னுடைய சீனியர்களுக்கும் ரொம்ப பெரிய மரியாதை கொடுக்க கூடியவர் அவர்.

அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று தெரிய வந்திருக்கிறது. படையப்பா படத்தின் ஷூட்டிங்கில் சிவாஜி கணேசன் நடித்துக்கொண்டிருந்தபோது ரஜினிகாந்த் வெளியில் வந்து ஓரமாக நின்றுகொண்டு கணேஷ் பீடியை பற்றவைத்து இழுத்துக்கொண்டு இருந்திருக்கிறார். அப்போது இயக்கநர் கே.எஸ்.ரவிக்குமார் ரஜினிகாந்திடம் வந்து என்ன சார் நீங்க இங்க நிக்கிறீங்க என கேட்டிருக்கிறார்.

அதற்கு ரஜினிகாந்த் இல்ல உள்ள பெரியவர் நடிச்சிட்டு இருக்காரு. அவருக்கு முன்னாடி இதெல்லாம் செய்யக்கூடாது. அதனாலதான் தனியா வந்து இருக்கேன் என சொல்லி இருக்கிறார். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் உச்சபட்ச ஸ்டாராக இருந்தாலும் ரஜினிகாந்த் எளிமையில் உயர்ந்திருப்பதனால தான் அவரது இடத்தை யாராலும் அசைத்துக் கூட பார்க்க முடியவில்லை என கமெண்ட் செய்து வருகின்றனர். படையப்பா படத்தில்தான் சிவாஜி கணேசனுக்கு ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக கொடுத்தது குறிப்பிடத்தக்கது

சற்று முன்