- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய், அஜீத் ரசிகர்கள் குறித்து இயக்குநர் மணிரத்னம் சொன்ன கமெண்ட் - என்ன, பொசுக்குன்னு இப்படி...

விஜய், அஜீத் ரசிகர்கள் குறித்து இயக்குநர் மணிரத்னம் சொன்ன கமெண்ட் – என்ன, பொசுக்குன்னு இப்படி ஒரு வார்த்தை சொல்லிப்புட்டாரு?

- Advertisement -

அந்த காலத்தில் எம்ஜிஆர் – சிவாஜிக்கு என்று இரண்டு தரப்பு ரசிகர்கள் இருந்தார்கள். ரசிகர்களுக்குள் மோதல் இல்லை என்றாலும், தங்கள் அபிமான நடிகர்களை உயர்த்தி பேசுவதுதான் ரசிகர்களின் வழக்கம். அதையடுத்து, ரஜினி – கமல் ரசிகர்கள், தங்கள் அபிமான நடிகர்களுக்காக ஆதரவு காட்டினர்.

துவக்கத்தில் ஏதேனும் சில இடங்களில் ரஜினி, கமல் ரசிகர்கள் சில வேளைகளில் அடித்துக்கொண்டதாக பத்திரிகைகளில் செய்தி வரும். ஆனால் அவர்களும் ஒரு கட்டத்தில், ரசிகர்களாக மட்டுமே இருந்துக்கொண்டு தங்கள் அபிமான நடிகர்களுக்காக வாழ்த்துகள் போஸ்டர் ஒட்டுவது, தோரணம் கட்டுவதோடு நிறுத்திக்கொண்டார்கள்.

- Advertisement -

ஆனால் இப்போது விஜய், அஜீத்குமார் ரசிகர்களின் சண்டை சமூக வலைதளங்களில் தீப்பிடித்து எரியாத குறையாக, ஒருவரை ஒருவர் கண்டபடி திட்டி வருகின்றனர். தங்கள் அபிமான நடிகரை உயர்வாக, மற்ற நடிகரை இழிவாக வசைபாடி வருகின்றனர். மிகவும் அவமானப்படுத்தும் விதமாக மீம்ஸ்களை கிரியேட் செய்து, சமூக வலைதளங்களில் பரவ விடுகின்றனர்.

அரசியல் கட்சியினர் கூட தேர்தல் நேரங்களில் மட்டும்தான் மேடை பிரசாரங்களின் போது எதிர்கட்சியினரை திட்டி பேசுவர். அவர்களை பற்றி விமர்சனம் செய்வர். ஆனால், சமூக வலைதளங்களில் விஜய், அஜீத்குமார் ரசிகர்கள் எப்போதும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வது வழக்கமாக இருக்கிறது.

- Advertisement -

இதற்கும் பொது நிகழ்ச்சிகளில், அல்லது அவர்களை பற்றி பேச நேரிடும் நேரங்களில் அஜீத்குமார் குறித்து விஜயோ, விஜய் குறித்து அஜீத்குமாரோ ஒரு வார்த்தை கூட தவறாக பேசுவதில்லை. லியோ பட வெற்றிவிழாவில் கூட, தல என்றால் அவர் ஒருத்தர்தான் என, விஜய் அஜீத்தை குறிப்பிட்டு பெருமையாகவே பேசி இருந்தார்.

இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம் சமீபத்திய ஒரு நேர்காணலில் இதுபற்றி பேசுகையில், சமூக வலைதளங்களில் இருக்கும் பலரும் விஷத்தை தான் கக்குகின்றனர். இது தெருவில் நின்று சண்டை போடுவதை போலவே இருக்கிறது. முக்கியமான விஷயம், சீரியஸான விஷயம் என்றால் கண்டிப்பாக பேசலாம். அதில் தவறில்லை. ஆனால் எனக்கு அஜீத் பிடிக்கும், எனக்கு விஜய் பிடிக்கும் என்பதற்காக ரசிகர்கள் சண்டை போட்டுக்கொள்வது உணர்வுபூர்வமாக இல்லை என்று கூறியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

- Advertisement -

சற்று முன்