தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான தமிழ் படங்கள் வெளியாகின்றன. இதில் 100 கோடி ரூபாய் வசூலை கடக்கும் படங்கள் எண்ணிக்கை மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டில் 8 படங்கள் மட்டுமே தமிழில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளன.
இதில் விஜய் நடித்த தி கோட் 445 கோடி ரூபாய் முதலிடம், சிவகார்த்திகேயன் நடித்த அமரன் 325 கோடி ரூபாய் இரண்டாமிடம், ரஜினி நடித்த வேட்டையன் 265 கோடி ரூபாய் மூன்றாமிடம் என வசூலில் சாதனை படைத்திருக்கிறது. இதில் விமர்சன ரீதியாக தோல்வியடைந்த கங்குவா, இந்தியன் 2 படங்களும் 100 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கின்றன.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் கடந்த 1990ம் ஆண்டு முதல் தற்போது 2024ம் ஆண்டு வரை கடந்த 35 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வசூலில் முதலிடம் பிடித்த படங்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி 1990ல் பணக்காரன் ரஜினி 1991ல் தளபதி ரஜினி 1992ல் அண்ணாமலை ரஜினி 1993ல் ஜென்டில்மேன் ஷங்கர் அர்ஜூன் 1994ல் காதலன் ஷங்கர் பிரபுதேவா ஆகியோர் படங்கள் வசூலில் முதலிடம் பெற்றுள்ளன.
அடுத்து 1995ல் பாட்ஷா ரஜினி 1996ல் இந்தியன் கமல் 1997ல் அருணாச்சலம் ரஜினி 1998ல் ஜீன்ஸ் ஷங்கர் பிரசாந்த் 1999ல் படையப்பா ரஜினி 2000ம் ஆண்டில் தெனாலி கமல், 2001ல் தீனா அஜித் 2002ல் பாபா ரஜினி 2003ல் சாமி விக்ரம் 2004ல் கில்லி விஜய் 2005ல் சந்திரமுகி ரஜினி 2006ல் வரலாறு அஜித் 2007ல் சிவாஜி ரஜினி படங்கள் வசூலில் முதலிடம் பெற்றிருக்கின்றன.
தொடர்ந்து 2008ல் தசாவதாரம் கமல் 2009ல் அயன் சூர்யா 2010ல் எந்திரன் ரஜினி 2011ல் ஏழாம் அறிவு சூர்யா 2012ல் துப்பாக்கி விஜய் 2013ல் சிங்கம் 2 சூர்யா 2014ல் லிங்கா ரஜினி 2015ல் ஐ சங்கர் விக்ரம் 2016ல் கபாலி ரஜினி 2017ல் மெர்சல் விஜய் 2018ல் 2.0 ரஜினி 2019ல் பிகில் விஜய் 2020ல் தர்பார் ரஜினி 2021ல் மாஸ்டர் விஜய் 2022ல் பொன்னியின் செல்வன் மணிரத்னம் 2023ல் ஜெயிலர் ரஜினி 2024ல் தி கோட் விஜய் ஆகியோர் வசூலில் முதலிடம் பெற்றுள்ளனர்.
இந்த 35 ஆண்டுகளில் அதிகபட்சமாக நடிகர் ரஜினி படங்கள் 15 ஆண்டுகள் முதலிடம் பெற்றுள்ளன. அடுத்து கமல் 3 படங்கள், விஜய் 5 படங்கள், அஜீத் படங்கள் 2 சூர்யா 3 படங்கள், ஷங்கர் இயக்கிய படங்கள் 4 படங்கள், மணிரத்னம் 2 படங்கள் என மொத்தம் 35 படங்கள் முதலிடத்தில் வசூலில் சாதித்திருக்கின்றன.





