- Advertisement -
Homeபொழுதுபோக்குசொன்ன சொல்லை காப்பாற்ற முடியவில்லை… நடிகர் சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டேன் - வெளிப்படையாக பேசிய இந்தி...

சொன்ன சொல்லை காப்பாற்ற முடியவில்லை… நடிகர் சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டேன் – வெளிப்படையாக பேசிய இந்தி நடிகர் அமீர்கான்!

- Advertisement -

பாலிவுட்டில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அமீர்கான். பல சூப்பர் ஹிட் வெற்றி படங்களை இந்தி சினிமா ரசிகர்களுக்கு கொடுத்தவர். சமீபத்தில் அமீர்கான் நடிப்பில் வெளியான படம் சித்தாரே சமீன்பர். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் சாதித்து வருகிறது.

அறிவுசார் சவால்கள் கொண்ட இளைஞர்களுக்கான கூடைப்பந்து பயிற்சியாளராக இருக்கும் அமீர் கான், அவர்களால் எப்படி எல்லாம் சோதிக்கப்படுகிறார் என்பதுதான் கதை. மூளை வளர்ச்சி குறைபாடு கொண்டவர்களை சமூகம் எந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்பதை அழகாக சித்தாரே சமீர்பன் படம் திரைப்படம் காட்சிப்படுத்தி இருக்கிறது.

இந்த படம் ஸ்பானிய மொழியில் வெளியான சாம்பியன் என்கிற படத்தின் ரீமேக் ஆகும். ஸ்பானிய மொழியில் வெளியான இந்த படம் வித்யாசமான கதைக்களத்தில் இருந்ததை அடுத்து இப்போது இது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு சித்தாரே சமீன்பர் என்ற படமாக வெளியாகி இருக்கிறது. படம் பார்த்த பாலிவுட் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்தில் இந்த படம் குறித்து பேசிய நடிகர் அமீர்கான் கூறியதாவது, சித்தாரே சமீன்பர் திரைப்படத்தின் கதையை இயக்குனர் ஆர்எஸ் பிரசன்னா என்னிடம் சொன்னபோது, நான் நடிப்பதாக இருந்தது. ஆனால் நான் நடித்த லால்சிங் சத்தா படத்தின் தோல்வியால் மிகுந்த மனவேதனையில் இருந்தேன். அதனால் சித்தாரே சமீன்பர் படத்திலிருந்து விலகினேன்.

பின்னர் தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இந்த படத்தை எடுக்க திட்டமிட்டோம். இது குறித்து சிவகார்த்திகேயனிடமும் பேசினோம். அதன்பிறகு நானும் பிரசன்னாவும் சித்தாரே சமீன்பர் படத்தின் எழுத்துப் பணிகளை மேற்கொண்டோம். அப்போது இந்த படத்தில் நானே நடிக்கிறேன் என்ற விருப்பத்தை தெரிவித்தேன். ஆர்எஸ் பிரசன்னாவும் ஓகே சொல்லிவிட்டார்.

பின்பு சித்தாரே சமீன்பர் படத்தில் நானே நாயகனாக நடித்தேன். இதற்காக நடிகர் சிவகார்த்திகேயனை அழைத்து நான் நேரில் மன்னிப்பு கேட்டேன். அது அவருக்கு ஏமாற்றமாக இருந்தாலும், என் சூழ்நிலையை புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டார் என்று அமீர்கான் கூறியிருக்கிறார். பாலிவுட்டில் ஸ்டார் நடிகராக உள்ள அமீர்கான், தமிழில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டது சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தையும் அதே நேரத்தில் எவ்வளவு பெரிய பண்பான மனிதர் என்றும் அமீர்கானை மனம் திறந்து பாராட்டுகின்றனர்.

சற்று முன்