- Advertisement -
Homeபொழுதுபோக்குவச்சாங்க பாருயா ட்விஸ்ட்... சூர்யாவுக்கு வில்லனாகும் விஜய்... சுதா கொங்கராவின் ஸ்மார்ட் மூவ்...

வச்சாங்க பாருயா ட்விஸ்ட்… சூர்யாவுக்கு வில்லனாகும் விஜய்… சுதா கொங்கராவின் ஸ்மார்ட் மூவ்…

- Advertisement -

நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் யு வி கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இதுவரை சூர்யா நடித்த திரைப்படத்திலேயே, மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.

கிட்டத்தட்ட கங்குவா படத்தின் சூட்டிங்கை ஓராண்டு காலமாக எடுத்து வருகிறார் சிறுத்தை சிவா. இதன் பெரும்பான்மையான படப்பிடிப்பு கொடைக்கானலில் அடர்ந்த காடுகளில் நடத்தப்பட்டது. முந்தைய ஜென்மத்திற்கும், இப்போதைய பிறவிக்கும் இடையே இருக்கும் தொடர்புதான் இந்த படத்தின் ஒன்லைன் ஸ்டோரியாம்.

- Advertisement -

இதில் நாயகியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். யோகி பாபு, கோவை சரளா, நட்டி, ஜெகபதிபாபு உள்ளிட்டோரும் இந்த படத்தில் உள்ளனர். சமீபத்தில் வெளியான கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ பலரையும் கவர்ந்தது. அரக்க வேடத்தில் இருந்த சூர்யா, நலமா என கம்பீரக் குரலில் பேசும் காட்சி பலரையும் ரசிக்க வைக்கும் வகையில் இருந்தது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து, வாடிவாசலில் சூர்யா நடிப்பார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதில் வெற்றிமாறன் பிஸியாக இருப்பதால் அது நடக்காமல் போனது. இப்படியான சூழலில் யாரும் எதிர்பாராத வகையில், சுதா கொங்கரா உடன் சூர்யா இணைய போவதாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

ஏற்கனவே சூர்யாவை வைத்து சூரரைப் போற்று வெற்றியை கொடுத்த சுதா கொங்கரா, மீண்டும் அவருடனே இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிற செய்துள்ளது. போதாக்குறைக்கு, சூர்யாவின் சகோதரராக துல்கர் சல்மான் இந்த படத்தில் நடிக்கிறாராம். முதலில் கார்த்தியை தான் இந்த கேரக்டருக்கு நடிக்க வைக்க சுதா கொங்கரா திட்டமிட்டு இருந்தார். ஆனால் கால் ஷீட் பிரச்சினை ஏற்பட்டதால், துல்கர் சல்மான் இணைந்திருக்கிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சூர்யாவுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை களம் இருக்க இயக்குனர் திட்டமிட்டு இருக்கிறாராம். இந்தி உலகில் தனது நடிப்பின் மூலம் நிலையான இடத்தைப் பெற்ற விஜய் வர்மா, நடிகை தமன்னாவின் காதலர் என்பது ஊருக்கே தெரியும். இந்த நிலையில், முதல் முறையாக இவர் தமிழில் அறிமுகமாவதால் சுதா கொங்கரா, என்ன திட்டம் வைத்துள்ளார் என்று பலரும் இப்போதே ஆர்வமாய் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்