- Advertisement -
Homeபொழுதுபோக்குஎல்லை மீறி கமலை கலாய்த்த காமெடி நடிகர் புகழ்... விளையாட்டு விபரீதமானதால் பயந்து போய் நடிகர்...

எல்லை மீறி கமலை கலாய்த்த காமெடி நடிகர் புகழ்… விளையாட்டு விபரீதமானதால் பயந்து போய் நடிகர் செய்தது என்ன?…

- Advertisement -

தனியார் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ஏழாவது சீசன் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு என்று எப்போதுமே ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கும். ஒரே வீட்டிற்குள் அடைத்து வைக்கப் பட்டிருப்பவர்களின் அணுகுமுறையை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவல் காட்டி வருவதால், பிக் பாஸுக்கு என்று எப்போதுமே ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு.

இப்படியான சூழலில் ஏழாவது சீசன், பலருக்கும் முக சுழிப்பு ஏற்படுத்தி இருக்கிறது என்று தான் கூற வேண்டும். மற்ற சீசனைப் போல் இல்லாமல், இந்த சீசனில் கவலையும் பலர் விமர்சித்து வந்தனர். அவர் உடை முதல், போட்டியாளர்களிடம் அவர் நடந்து கொண்ட விதம் குறித்து பலரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இணையத்திலும் இந்த பேச்சு பரவலாக அடிபட்டது.

இந்த நிலையில், youtube பிரபலங்களான கோபி சுதாகர் இருவரும் பிக் பாஸ் சீசன் குறித்தும், அதில் கமலை குறித்தும் கலாய்த்து தள்ளினர். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகின. இப்படியான சூழலில், நகைச்சுவை நடிகர் புகழ் மற்றும் குரேசி ஆகிய இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் கமலை தரக்குறைவாக கலாய்த்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், புகழ் மற்றும் குரேசி ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். அப்போது, இருவரும் கமல் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் மாயா இருவரையும் சேர்த்து வைத்து கலாய்த்தனர். கமலுக்கு பிடித்தது மாயா தான் என்றும், அவருக்கு பிடித்த ஒரே மாயவரம் தான் என்றும் காமெடி என்கின்ற பெயரில் ஏதோ ஒன்றை உளறிக் கொட்டினர்.

துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி தானே இதை யார் பார்க்கப் போகிறார்கள் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவ ஆரம்பித்தது. இதை பார்த்து கமல் ரசிகர்கள் காண்டாகினர். அது எப்படி, இவ்வளவு கீழ்த்தரமான முறையில் கமலை விமர்சிக்கலாம் என்றும் பலரும் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். சினிமா துறையில் இப்போதுதான் வளர்ந்து கொண்டிருக்கும் புகழ், இப்படி ஒரு கேவலத்தை செய்து விட்டு எப்படி திரைத்துறையில் நீடிப்பார் இணையவாசிகள் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.

இப்படியான சூழலில், புகழ் தற்போது இதற்கு மன்னிப்பு கேட்டு உள்ளார். துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அதனை நடத்தியவர்கள் தான் இந்த ஸ்கிரிப்ட்டை தங்களுக்கு கொடுத்ததாகவும், அதன்படியே தாங்கள் செய்து விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். இதேபோல் குரேஷியும், வீடியோவை விட்டு கமல் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரி இருக்கிறார். இதைப் பார்த்த கமல் ரசிகர்கள், இதெல்லாம் உங்களுக்கு தேவைதானா என்று இப்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சற்று முன்