- Advertisement -
Homeபொழுதுபோக்குபான் இந்தியா ஸ்டார் நடிகர்கள் பிரபாஸ், அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடிக்க மறுக்கும் பிரபல நடிகை...

பான் இந்தியா ஸ்டார் நடிகர்கள் பிரபாஸ், அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடிக்க மறுக்கும் பிரபல நடிகை – என்ன கொடும சார் இது?

- Advertisement -

சினிமா துறையை பொருத்த வரை பிரபலமான முன்னணி நடிகர்கள், முன்னணி நடிகைகளுடன் ஜோடியாக நடிக்க பலரும் விரும்புவர். மெகா ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர்களின் படங்களில் நடிக்க பிரபல நடிகர்களும் விரும்புவர். அதே போல் வெற்றிப் பட ஹீரோக்களுடன் இணைய டைரக்டர்களும் ஆர்வம் காட்டுவர்.

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜீத்குமாருடன் நடிக்க விரும்பும் நடிகர், நடிகைகள் பலருண்டு. அதே போல் மணிரத்னம், பாரதிராஜா, வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்கவும் நடிகர், நடிகைகள் விரும்புகின்றனர். இதற்கு காரணம் கலைத்துறையில் அவர்கள் ஆளுமை மிக்கவர்களாக இருப்பவர்கள்தான்.

- Advertisement -

அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களாக பிரபாஸ், அல்லு அர்ஜூன் வலம் வருகின்றனர். பாகுபலி, கல்கி 2898 ஏடி போன்ற பான் இந்தியா படங்களில் நடித்து பெரிய அளவில் இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடுபவராக பிளபாஸ் இருக்கிறார்.

அதே போல் புஷ்பா படம் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற நடிகர் அல்லு அர்ஜூன் இப்போது, புஷ்பா 2 படம் வெளியான நிலையில் மீண்டும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார். படம் ரிலீஸான 3 நாட்களில் ரூ. 500 கோடி வசூலை கடந்த நிலையில், இந்த படம் ரூ. 2000 கோடி வசூல் சாதனை படைக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

இந்த சூழலில் நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் ஆகியோர் நடிக்கும் படங்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என பல முன்னணி நடிகைகள் ஆவலாக காத்திருக்கின்றனர். ஆனால் அப்படி நடிக்க வந்த வாய்ப்பை தொடர்ந்து மறுத்து வருகிறார் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

சில இயக்குனர், சில முன்னணி தயாரிப்பாளர்கள் நடிகை ஷ்ரத்தா கபூரை தொடர்பு கொண்டு நடிகர் பிரபாஸ் நடிக்கும் படத்திலும், நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்திலும் ஜோடியாக நடிக்க அழைப்பு விடுத்த போது, அதற்கு ஷ்ரத்தா கபூர் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர்களுடன் நடிக்க விரும்பவில்லை என்றும் கூறியிருக்கிறார். ஆனால் ஷ்ரத்தா கபூர் கடந்த 2019ம் ஆண்டில் வெளியான சாஹோ என்ற படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு ஹீரோக்களுடன் நடித்தால் பாலிவுட்டில் இமேஜ் குறைந்து விடும் என்று நினைக்கிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்