- Advertisement -
Homeபொழுதுபோக்குஎம்ஜிஆர் நடித்த மாஸ் ஹிட் படம்… டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வரும் 4ம் தேதி ரிலீஸ்...

எம்ஜிஆர் நடித்த மாஸ் ஹிட் படம்… டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வரும் 4ம் தேதி ரிலீஸ் – திருவிழா கொண்டாட தயாரான புரட்சித் தலைவரின் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கடந்த1960 -70களில் இருந்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். அவரது கடைசி படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் கடந்த 1978ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெளியானது. அதுவரை அவர் எண்ணற்ற சூப்பர் ஹிட் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார்.

எம்ஜிஆரை நடிகராக ஏற்றுக்கொண்ட ரசிகர்கள், பிறகு தலைவராகவும் ஏற்றுக்கொண்டதால் அதிமுக என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய எம்ஜிஆர் தமிழ்நாட்டில் முதலமைச்சராக 1977ம் ஆண்டில் பதவியேற்றார். எம்ஜிஆரை அன்று முதல் இன்று வரை மக்கள் கொண்டாடிக் கொண்டு தான் இருக்கின்றனர். அவர் மறைந்து 37 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அவர் மக்கள் மனங்களில் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்.

- Advertisement -

மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிப்பில் கடந்த 1975ம் ஆண்டு வெளியான படம் இதயக்கனி. அண்ணாவின் இதயக்கனி எம்ஜிஆர் என்று சொல்லப்பட்டதால் இந்த படத்துக்கு இதயக்கனி என்றே பெயர் வைக்கப்பட்டது. இந்த படத்தை டைரக்டர் ஏ ஜெகநாதன் டைரக்ட் செய்திருந்தார். தேங்காய் சீனிவாசன் ஐசரி வேலன் வெண்ணிற ஆடை நிர்மலா பண்டரிபாய் ராஜ சுலோசனா உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இதயக்கனி படம் எம்ஜிஆர் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாகும். எம்ஜிஆரின் அரசியல் பயணத்திற்கு பெரிய உந்துசக்தியாக இருந்த படம் இதயக்கனிதான். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் வசனங்களும் மக்கள் மனதில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. இதயக்கனி படத்தை ஆர் எம் வீரப்பன் திரைக்கதை எழுதி தயாரித்திருந்தார். எம்எஸ் விஸ்வநாதன் படத்துக்கு இசையமைத்திருந்தார்.

- Advertisement -

இன்பமே உந்தன் பேர் பெண்மையோ, நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற போன்ற பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆகின. இப்போதும் இந்த பாடல்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்படுகிறது. காலங்கள் பல கடந்தாலும் மறக்க முடியாத திரைக் காவியங்களில் ஒன்றாக ரசிகர்கள் மனதில் இருந்து வரும் படம்தான் இதயக்கனி. இந்த படம் வெளியாகி 50 ஆண்டுகள் கடந்து விட்டது.

இந்நிலையில் தற்போது இதயக்கனி படம் மீண்டும் வருகிற 4ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. சுமார் 100க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இதயக்கனி படம் வெளியாகிறது. உலக எம்ஜிஆர் பேரவை இதயக்கனி படத்தை வெளியீடு செய்கிறது. 4கே டிஜிட்டல் முறையில் நவீன தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் இதயக்கனி படத்திற்கு எம்ஜிஆர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. வரும் 4ம் தேதி முதல் இதயக்கனி படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களில் திருவிழா கொண்டாட எம்ஜிஆர் ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்