நடிகர் பாடகர் தயாரிப்பாளர் ஆகிய அடையாளங்களுடன் இருந்த தனுஷ் இப்போது முன்னணி இயக்குனராகவும் மாறி விட்டார். ப பாண்டி ராயன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இட்லி கடை என 4 படங்களை அவர் டைரக்ட் செய்திருக்கிறார். இதில் ப பாண்டி ராயன் படங்கள் வெளியாகி பெரிய வெற்றியை கண்டன.
அடுத்து வருகிற 21ம் தேதி நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் ரிலீஸாக உள்ளது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 10ம் தேதி இட்லி கடை படம் ரிலீஸாக உள்ளது. ஆனால் குட் பேட் அக்லி படம், அதே நாளில் ரிலீஸாவதால் இட்லி கடை படம் ரிலீஸ் தள்ளி வைப்பதாக ஒரு தகவல் பரவியது.
ஆனால் ஏற்கனவே அறிவித்த அதே நாளில்தான் சுடச்சுட இட்லி கடை படம் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தற்போது உறுதி செய்யப்பட்டு விட்டது. இந்த படத்தில் அருண் விஜய் வில்லன் கேரக்டரில் நடிக்கிறார். மேலும் சத்யராஜ் ராஜ்கிரண் நித்யாமேனன் ஆகியோருடன் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
வருகிற 6ம் தேதி விடாமுயற்சி படம் ரிலீஸாக உள்ள நிலையில், அடுத்த 2 மாதங்களில் அஜீத்குமாரின் குட் பேட் அக்லி படமும் ரிலீஸாகும் என்ற அறிவிப்பு ஏகே ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது. ஆனால் இப்போது அந்த படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
குட்பேட் அக்லி படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் பெற்றுவிட்டது. ஆனால் இன்னும் சாட்டிலைட் உரிமம் இந்த படத்துக்கு விற்பனை ஆகவில்லை. சன் பிக்சர்ஸ் நெட்வொர்க் மற்றும் கலைஞர் டிவி உள்ளிட்ட சேட்டிலைட் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் குட்பேட் அக்லி படத்தை தயாரித்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்க்கும் விலைக்கு சாட்டிலைட் உரிமம் வியாபாரம் ஆகி விட்டால், படத்தின் ரிலீஸ் தேதியை உடனே உறுதி செய்து அறிவித்து விடுவார்கள். அதனால் அந்த நிறுவனங்கள் கையில்தான் குட்பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி உள்ளது. ஆனால் தனுஷின் இட்லி கடை சொன்னபடி வருகிற ஏப்ரல் 10 ரிலீஸ் என்பதில் உறுதியாக உள்ளது.





