- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த பாட்டை நைட் 2 மணிக்கு 5 நிமிஷத்துல எழுதிட்டேன், ஒரு வார்த்தை கூட ...

அந்த பாட்டை நைட் 2 மணிக்கு 5 நிமிஷத்துல எழுதிட்டேன், ஒரு வார்த்தை கூட யோசிச்சு நான் எழுதலே – இசைஞானி சொன்ன ஆச்சரியம்!

- Advertisement -

இயக்குனர் பாலா இயக்கிய படங்களில் ஒன்று நான் கடவுள். இந்த படம் கடந்த 2009ம் ஆண்டில் வெளியானது. ஆர்யா பூஜா சிங்கம்புலி மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருந்தார்.

இந்திய ஆன்மிக நகரமான காசி நகரத்தின் வாழ்க்கையை மையப்படுத்திய ஒரு கதைக்களத்தில் பிச்சை எடுக்கும் மாற்றுத்திறனாளிகளை முக்கிய கதாபாத்திரங்களாக கொண்ட ஒரு படமாக நான் கடவுள் படம் இருந்தது. இதில் ஆர்யா ஹீரோவாகவும் பூஜா நாயகியாகவும் நடித்திருந்தனர். இந்த படம் பாலா இயக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இந்த படத்தில் இடம்பெற்ற பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே என்ற பாடலை பாடகர் மதுபாலகிருஷ்ணன் பாடியிருந்தார். ஆன்மிக தத்துவம் நிறைந்த இந்த பாடல் பெரிய அளவில் ரசிகர்களின் கவனம் பெற்றது. இந்த பாடலை எழுதி இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜா ஒரு இசையமைப்பாளர் மட்டுமல்ல பாடகர் கவிஞர் என பன்முக தன்மை கொண்டவர். சில நேரங்களில் கவிஞர்கள் எழுதிய பாடல் வரிகளில் சில வார்த்தைகளை மாற்றிப் போட செய்தவர் இளையராஜா. அந்த வரிகளுடன் வெளியான பாடல்கள் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு இருக்கின்றன.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இசைஞானி இளையராஜா கூறியதாவது, ஒருநாள் நைட் தூக்கத்தில் இருந்து எழுந்துட்டேன். பாத்ரூம் போயிட்டு வந்து பார்த்தால் 2 மணி தான் ஆகுது. ஆனா 5 மணி மாதிரி மனசுல ஒரு உணர்வு இருந்துச்சு.

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே என்று ஒரு வார்த்தை மனசுக்குள்ள வருது. உடனே பேப்பர் எடுத்து எழுத ஆரம்பித்தேன். அந்த பாட்டுல வந்த வார்த்தைகள் நான் யோசித்து எழுதுன வார்த்தைகள் கிடையாது. தானா வந்த வார்த்தைகள். அஞ்சு நிமிஷம் கூட இருக்காது. அந்த முழுப்பாட்டையும் எழுதிட்டேன் என்று இசைஞானி இளையராஜா அந்த நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்