- Advertisement -
Homeபொழுதுபோக்குபாடகர் கே ஜே ஜேசுதாஸ் ஆசையை நான் நிறைவேற்றி விட்டேன்; மலையாள மொழியில் சந்தோஷமாக அறிவித்த...

பாடகர் கே ஜே ஜேசுதாஸ் ஆசையை நான் நிறைவேற்றி விட்டேன்; மலையாள மொழியில் சந்தோஷமாக அறிவித்த இசைஞானி இளையராஜா – அட அப்படியா என ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

தாய்மொழி மலையாளமாக இருந்தாலும் தமிழில் தேன் சொட்டும் மிக அற்புதமான பல பாடல்களை பாடியவர் பாடகர் கேஜே ஜேசுதாஸ். அவரது குரலில் ஒலிக்கும் ஹரிவராசனம் பாடலும், அம்மா என்று அழைக்காத உயிரில்லையே என்ற பாடலும் கேட்காத செவிகளே இல்லை என்று சொல்லலாம்.

தமிழில் பல நூற்றுக்கணக்கான பாடல்களை அற்புதமான செவி இனிக்கும் பாடல்களை பாடியவர் கேஜே ஜேசுதாஸ் என்றால் மிகையல்ல. அவரும் எஸ் பி பியும் இணைத்து பாடிய காட்டுக்குயிலு மனசுக்குள்ள என்ற தளபதி படப் பாடல் இப்போதும் டிரெண்டிங் ஆக ரசிகர்களின் மத்தியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இசைஞானி இளையராஜா இசையில் கேஜே ஜேசுதாஸ் பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி இருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் இசைஞானி இளையராஜா வெளியிட்ட ஒரு வீடியோவில், வருகிற 2025ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி தனது சிம்பொனி இசையை வெளியிடப் போவதாக அவர் அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு அதிக உற்சாகத்தை கொடுத்துள்ளது. சிம்பொனி பதிவு செய்து முடித்து விட்டதாகவும் ஒரு தகவலையும் இளையராஜா இப்போது கூறியிருக்கிறார்.

தற்போது இளையராஜா வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் மலையாளத்தில் அவர் கூறியிருப்பதாவது, அன்புக்குரிய கேரள மக்களே சொந்தங்களே வணக்கம். இந்த செய்தி என்னுடைய கேஜே ஜேசுதாஸ் அண்ணனுக்கானது மட்டும்தான். ஜேசுதாஸ் அண்ணனுக்கு கொச்சியில் வைத்து பாராட்டு விழா நடந்தபோது அண்ணன் என்னிடம் தன்னுடைய ஆசையை சொன்னார்.

- Advertisement -

அது என்னவென்றால் கேரளாவுக்கு வந்து நிறைய பாடல்களை பாடி இருக்கிறீர்கள், இசையமைத்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் சிம்பொனி செய்ததில்லை. நீங்கள் ஒருநாள் கேரளாவில் சிம்பொனி இசையமைக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார். ஜேசுதாஸ் அண்ணன் சொன்னதை நான் நிறைவேற்றி விட்டேன்.

சிம்பொனி இசையை முழுமையாக எழுதி சிம்பொனியை முழுமையாக ரெக்கார்ட் செய்து வைத்திருக்கிறேன். இந்த விஷயத்தை ஜேசுதாஸ் அண்ணனுக்கு பெரிய சந்தோஷத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் சொன்ன வேலை கடவுளின் அனுகிரகத்தோடு சரியாக வந்துள்ளது. ரொம்ப சந்தோஷம். ஜேசுதாஸ் அண்ணன் ஆசையை நான் நிறைவேற்றி விட்டேன் என இளையராஜா அந்த வீடியோவில் மலையாள மொழியில் தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்