- Advertisement -
Homeபொழுதுபோக்கு35 நாட்களில் சிம்பொனி இசை நோட்ஸ் எழுதி முடித்ததாக ஏற்கனவே அறிவித்த இசைஞானி இளையராஜா -...

35 நாட்களில் சிம்பொனி இசை நோட்ஸ் எழுதி முடித்ததாக ஏற்கனவே அறிவித்த இசைஞானி இளையராஜா – இப்போ அதுபத்தி லேட்டஸ்ட் அப்டேட் என்ன சொல்றார் தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் ஒரு இசைக்கலைஞராக இருப்பவர் இசைஞானி இளையராஜா. கடந்த 47 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இசைத்துறையில் சக்ரவர்த்தியாக வலம் வருகிறார். இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இளையராஜா, பல ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். இசையில் இளையராஜா ஒரு சகாப்தம் என்றால் அது மிகையல்ல.

இசைஞானி இளையராஜா இசைக்காகவே ஓடிய படங்கள் ஏராளமாக இருக்கின்றன. இப்போதும் நடிகர் ராமராஜன், நான் இவ்வளவு பெரிய நடிகராக வளர்ந்ததற்கு காரணமே என்னுடைய படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் இசையும், பாடல்களும்தான் என்று அவர் பேசும் மேடைகளில் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் ராமராஜன், சமீபத்தில் அவர் நடித்த சாமானியன் என்ற படத்திற்கு இளையராஜா தான் இசையமைக்க வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் பிடிவாதமாக இருந்திருக்கிறார் என்ற தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. அந்தளவுக்கு இசையில் உன்னத கலைஞராக இருக்கிறார்.

இளையராஜாவை பொருத்தவரை அவர் இசைத்தறையில் செய்த சாதனைகளும் ஏராளம். ஒரே நாளில் 7க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிறமொழி படங்களுக்கும் இளையராஜா இசையமைத்திருக்கிறார். இவர் ஏற்கனவே சிம்பொனி இசையமைத்தவர். மேஸ்ட்ரோ பட்டம் பெற்றவர் இளையராஜா என்பது அவரது ரசிகர்கள் அறிந்த உண்மைதான்.

- Advertisement -

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிம்பொனி இசைக்கான நோட்ஸ் 35 நாட்களில் எழுதி முடித்துவிட்டேன் என்று இளையராஜா திடீரென வீடியோ வெளியிட்டு அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதுவும் அவரது மகள் பவதாரணி இறந்த ஓரிரு மாதங்களுக்குள் அவர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மகளை இழந்த துக்கத்தையும் தாண்டி இசையில் இவர் லயித்திருக்கிறாரே என்று பலரும் வியந்து போய்விட்டனர்.

இசைஞானி இளையராஜா நேற்று வெளியிட்ட ஒரு வீடியோவில், இங்கிலாந்தில் அவர் பதிவு செய்த சிம்பொனி இசையை வெளியிடப் போகிறார் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வீடியோ வெளியீடு செய்துள்ள இளையராஜா அதில், இங்கிலாந்தில் நான் பதிவு செய்த முழு சிம்பொனி இசையை அடுத்த ஆண்டு ( 2025) ஜனவரி 26ம் தேதி (குடியரசு தினம்) அன்று வெளியிடப் போகிறேன். இதை இந்த தீபாவளி திருநாளில் அறிவிப்பதில் மகிழ்ச்சி என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இது இளையராஜா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்