- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழகத்தை ஆளப் போறேன்னு புறப்பட்டு வந்த தளபதி விஜய், ஆரம்பத்திலேயே இவ்வளவு பிழைகள், குறைகள் இருந்தால்...

தமிழகத்தை ஆளப் போறேன்னு புறப்பட்டு வந்த தளபதி விஜய், ஆரம்பத்திலேயே இவ்வளவு பிழைகள், குறைகள் இருந்தால் எப்படி? – குழப்பத்தில் ரசிகர்கள்

- Advertisement -

புதியதாக அரசியல் கட்சி துவங்கவும், அரசியல் கட்சி நடத்தவும், ஜனநாயக முறைப்படி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கவும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. அதனால் அரசியலுக்கு வர யாருக்கும், எந்த நிபந்தனையும் இல்லை. மக்களை வழிநடத்தவும், அவர்களுக்கு சிறப்பான ஆட்சியை தரவும் தகுதியான நபர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலில் குதிக்கலாம்.

அதிமுக, திமுக இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக புதிய இரத்தம் பாய்ச்சியது போல தமிழக அரசியலில் ஒரு மாற்றம் வேண்டும் என்று தமிழக மக்கள் கருதுகின்றனர். நல்ல ஒரு தலைவனை எதிர்பார்க்கின்றனர். அப்படி விஜய் வந்தால் நல்லதுதான் என்பது ஒரு தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

- Advertisement -

ஆனால் விஜய், ஆரம்பம் முதலே சறுக்கல்களை சந்தித்து வருகிறார். தமிழக வெற்றி கழகம் என கட்சி பெயரை அறிவித்த போது தமிழக வெற்றிக் கழகம் என்பதே சரி. வெற்றி கழகம் இடையில் க் வர வேண்டும் என பலரும் குற்றம் சாட்டினர், அதற்குபின் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சியின் பெயரில் திருத்தம் செய்தார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி பெயரை தவெக என்று சுருக்கினால் ஆங்கிலத்தில் டிவிகே(TVK) என்று வருகிறது. ஏற்கனவே தமிழக வாழ்வுரிமை கட்சி என்ற அரசியல் இயக்கத்தை வேல்முருகன் நடத்தி வருகிறார். இந்நிலையில் டிவிகே என்பது எங்களது தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆங்கில எழுத்துகளை குறிப்பதால், இதை விஜய் மாற்ற வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

நேற்று பனையூரில் நடிகர் விஜய் தனது தவெக கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார். அதில் இரண்டு யானைகள் படம் இடம்பெற்றுள்ளது. தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் கொடியில் யானை சின்னம் உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைப்படி இப்படி விஜய் கட்சியில் யானைகள் உருவம் இருப்பது விதிமீறல். உடனடியாக கொடியில் இருந்து யானைகளை அகற்ற வேண்டும் என்று சர்ச்சை கிளம்பியுள்ளது.

இப்படி கட்சி பெயரில், கொடியில் விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் கூறப்படும் அளவுக்கு விஜய் தரப்பில் பலவீனமாக இருப்பது ஏன் என்ற குழப்பம் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. கட்சி பெயர், கட்சி கொடி போன்றவற்றை அறிவிக்கும் முன் இதுபோன்ற சட்ட சிக்கல்கள் இருக்கிறதா, பிரச்னைகள் இருக்கிறதா என்பதை முழுமையாக விசாரித்து ஆராய்ந்து, நன்கு ஆலோசனை செய்துதானே இதை செயல்படுத்த வேண்டும். விஜய் கட்சியில் இதைப்பற்றி எல்லாம் யோசிக்க யாருமே இல்லையா, என்றும் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்