- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படம் இசை வெளியீட்டு விழா… ரொம்பவும் மாத்தி யோசிக்கறாங்களே? - சிக்கல்களை எதிர்கொள்ள தயாரான...

ஜனநாயகன் படம் இசை வெளியீட்டு விழா… ரொம்பவும் மாத்தி யோசிக்கறாங்களே? – சிக்கல்களை எதிர்கொள்ள தயாரான நடிகர் விஜய்!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு 100 சதவீதம் முடிவடைந்து சில தினங்களுக்கு முன்பே நிறைவு நாளில் பூசணிக்காய் உடைத்து கேக் வெட்டி கொண்டாடி விட்டனர். படக்குழுவினருடன் கடைசி நாளில் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிலையில், அதுபற்றிய விவரங்கள், புகைப்படங்கள் இன்னும் சில மாதங்களில் வெளியிட வாய்ப்புள்ளது. ஏனென்றால் இப்போதைக்கு நடிகர் விஜய் அவற்றை வெளியிட வேண்டாம் என்று படக்குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய் நடித்த படங்கள் என்றாலே இசை வெளியீட்டு விழா மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தும். அதுவே ஒரு வெற்றி விழா போல அமைந்து விடும். லியோ படத்துக்கு இசை வெளியீட்டு விழா திட்டமிடப்பட்டு கடைசி நேரத்தில் அரசியல் காரணங்களால் நடக்காமல் போனது. அந்த சம்பவத்தின் காரணமாக, அடுத்து விஜய் நடித்த தி கோட் படத்துக்கு இசை வெளியீட்டு விழா நடத்த வேண்டாம் என்று விஜயே கூறிவிட்டார்.

- Advertisement -

இந்நிலையில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தும் முடிவில்தான் நடிகர் விஜயும் படக்குழுவினரும் இருக்கின்றனர். சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியம் அங்கு அனுமதி மறுக்கப்பட்டால் சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் இந்த விழா நடக்க வாய்ப்புள்ளது. ஆனால் நேரு இண்டோர் ஸ்டேடியம்தான் போதுமானதாக இருக்கும் என்பதால் அதுவே விஜயின் முதல் சாய்ஸ் ஆக உள்ளது.

வழக்கமாக விஜய் படங்களின் இசை வெளியீடு விழா அனுமதி டிக்கெட்டுகள் மாவட்டம் வாரியாக ரசிகர்கள் மன்றங்கள் மூலமாக வினியோகம் செய்யப்பட்டு விடும். ஆனால் இந்த முறை ஆன்லைன் வாயிலாக ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பங்கேற்கும் விதமாக டிக்கெட்களை வினியோகம் செய்யலாம் என்று நடிகராக இல்லாமல் தவெக கட்சி தலைவராக விஜய் முடிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

ஏனெனில் அரசியல் தலைவராக ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் பேச விரும்பும் நடிகர் விஜய், ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அந்த விழாவில் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கிறார். ஆனால் இதில் 2 விதமான ஆபத்துகளை நடிகர் விஜய் சந்திக்கும் சிக்கல் உள்ளது. ரஜினி திமுக அதிமுக என மாற்று கட்சியினர் இந்த டிக்கெட்டுகளை பதிவு செய்து, விழாவில் கலந்துக்கொண்டு விஜய்க்கு எதிராக நிகழ்ச்சியில் ஆரவாரம் கூச்சல் செய்து பிரச்னைகளை உண்டு பண்ணலாம்.

மற்றொன்று அவர்கள் எல்லாம் இந்த விழாவுக்கு வருவதாக ஆன்லைனில் டிக்கெட்டுகளை பதிவு செய்துவிட்டு, பிறகு விழாவுக்கு வராமல் புறக்கணிக்கலாம். இதனால் விழா அரங்கில் மக்கள் கூட்டமே இல்லாமல் விஜய்க்கு அவப்பெயரை ஏற்படுத்த முயற்சிக்கலாம். கட்சி நிர்வாகிகள் மூலம் இந்த டிக்கெட்டுகளை வழங்கினால் ரசிகர்கள், கட்சியினரை மட்டுமே அவர்கள் அழைத்து விடுவர் என்பதால், விஜய் இதில் என்ன முடிவு செய்யப் போகிறார் என ஜனநாயகன் படக்குழு காத்திருக்கிறது.

- Advertisement -

சற்று முன்