- Advertisement -
Homeபொழுதுபோக்கு18 மாதங்களாக நீடித்து வந்த விடுதலை 2 படப்பிடிப்பு எப்போ பூசணிக்காய் உடைத்து முடிக்கிறாங்க தெரியுமா?...

18 மாதங்களாக நீடித்து வந்த விடுதலை 2 படப்பிடிப்பு எப்போ பூசணிக்காய் உடைத்து முடிக்கிறாங்க தெரியுமா? – அப்பாடா, உறுதியான தகவல் வந்தாச்சு!

- Advertisement -

தமிழ் சினிமா இயக்குனராக உள்ள வெற்றிமாறன், இந்திய அளவில் கவனிக்கப்படும் ஒரு முக்கிய இயக்குனராக கவனிக்கப்படுகிறார். அதற்கு காரணம், நடிகர்களுக்காக தன்னை காம்ப்ரமைஸ் செய்துக் கொள்ளாமல், தனது படைப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து அவர் படங்களை இயக்குவதுதான். அந்த வகையில் அவரது படங்கள் ரசிகர்களிடம் பேசுகின்றன.

அந்த வகையில் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை போன்ற மிகச்சிறந்த படங்களை தந்திருக்கிறார். இயக்குனராக மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் வெற்றிமாறன் இருந்து வருகிறார். கவின் நடிக்கும் ஸ்பர்க் என்ற படத்தை வெற்றிமாறன் தயாரிக்கிறார் என்பது லேட்டஸ்ட் தகவலாக உள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் விடுதலை. காமெடி நடிகர் சூரி, கதாநாயகனாக இந்த படத்தில் கான்ஸ்டபிள் குமரேசன் கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து சூரி நடித்த கருடன் படமும் மிகப் பெரிய ஹிட் படமாக திரையரங்குகளில் இப்போது ஓடிக்கொண்டு இருக்கிறது. இதுவரை ரூ. 25 கோடிக்கு மேல் கருடன் படம் வசூலித்துள்ளது.

விடுதலை 2 படத்தில் சூரி கதாநாயகன் என்றாலும், வாத்தியார் பெருமாள் என்ற தீவிரவாதி கேரக்டரில் நடித்தவர் விஜய் சேதுபதி. சில காட்சிகளே படத்தில் வந்திருந்தாலும் அவரது நடிப்புதான் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. அதனால் விடுதலை 2 படத்தில் அவருக்கான காட்சிகளை அதிகப்படுத்தி இயக்குனர் வெற்றிமாறன், தரமான சம்பவமாக படத்தை தர இருக்கிறார்.

ஆனால் விடுதலை படம் வெளியான சில மாதங்களில், அதிகபட்சமாக 6 மாதங்களுக்குள் விடுதலை 2 படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் ஆகியும் இன்னும் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு, தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கிறது. இது ரசிகர்களை பலத்த ஏமாற்றமடைய செய்துள்ளது.

இந்நிலையில், விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பை இன்னும் இரண்டே மாதங்களில் முடித்து விடவும், வரும் தீபாவளிக்கு விடுதலை 2 படத்தை ரிலீஸ் செய்யவும் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் முடிவு செய்து, அதற்கேற்ப படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர். அதன்பிறகு அக்டோபரில் வாடிவாசல் படப்பிடிப்பை துவங்கவும் வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் உறுதிபடுத்துகின்றன.

சற்று முன்