- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் ஒரே பெயரில் இத்தனை நடிகர்களா? ரசிகர்களுக்கு இதுவே பெரிய தலைவலியா மாறீட்டு வருதே?

தமிழ் சினிமாவில் ஒரே பெயரில் இத்தனை நடிகர்களா? ரசிகர்களுக்கு இதுவே பெரிய தலைவலியா மாறீட்டு வருதே?

- Advertisement -

வழக்கமாக சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் நடக்கும்போது குறிப்பிட்ட தொகுதியில் ஒரு வெற்றி வேட்பாளர், மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு பெற்ற ஒரு வேட்பாளர் போட்டியிடுகிறார் என்றால் வேண்டுமென்றே வாக்காளர்களை குழப்பி விடுவதற்காக, பிரச்சாரத்தில் பின்னடைவை ஏற்படுத்த அந்த முக்கிய வேட்பாளரின் பெயரில் பல வேட்பாளர்கள் அதிகமாக வேட்பு மனுத்தாக்கல் செய்வது வழக்கம்.

உதாரணமாக முத்துசாமி என்பது அவரது பெயர் இருக்கும் பட்சத்தில், அந்த பெயரில், வேட்பாளர்களை 10 முதல் 15 பேர் வரை அதே தொகுதியில் அல்லது அதே வார்டில் போட்டியிட செய்வார்கள். அப்போது எந்த முத்துசாமிக்கு, எந்த வாக்கு சின்னம் என்று தெரியாமல் வாக்காளர்கள் குழம்பி போய்விட வாய்ப்புள்ளது.

- Advertisement -

அதேபோல் தமிழ் சினிமாவிலும் இப்போது ஒரே பெயரில் 4 நடிகர்கள் இருப்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. நடிகர் சிவகுமாரின் மகன் சூர்யா, கடந்த 30 ஆம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இவரது இயற்பெயர் சரவணன் என்றாலும், சினிமாவுக்காக சூர்யா என இவருக்கு பெயர் மாற்றம் செய்தவர் இயக்குனர் வசந்த். நேருக்கு நேர் படத்தில் சூர்யா அறிமுகமானபோது சூர்யா என பெயர் வைத்ததாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து அஜீத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த வாலி படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எஸ் ஜே சூர்யா. இவர் பிறகு நடிகராகவும் மாறிவிட்டார். குறிப்பாக இப்போது வில்லன் நடிகராக தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தில் இருக்கிறார். இவரது பெயரும் எஸ் ஜே சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து காமெடி நடிகராக இருந்த நடிகர் சூரி, முன்னணி நடிகராக இப்போது மாறிவிட்டார். சூரி ஹீரோ நடிகராக இப்போது நடித்து வருகிறார். விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து ஹீரோவாக படங்களில் கமிட் ஆகி வருகிறார். இப்போது நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யாவும் நடிக்க வந்துவிட்டார். அவரது நடிப்பில் வருகிற நவம்பர் 14ம் தேதி பீனிக்ஸ் என்ற படம் வெளியாகிறது.

அதே நாளில் நடிகர் சூர்யா நடித்த கங்குவா படம் வெளியாகிறது. இப்படி சூர்யா, எஸ் ஜே சூர்யா, சூரி, விஜய் சேதுபதி மகன் சூர்யா என தமிழ் சினிமாவில் நான்கு நடிகர்கள் சூர்யா என இருப்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரிய தலைவலியாக மாறி இருக்கிறது. இனிமேல் எந்த நடிகர் படத்துக்கு போனாலும், நடிகர் சூர்யா, விஜய் சேதுபதி மகன் சூர்யா, எஸ்ஜே சூர்யா, காமெடி நடிகராக இருந்து ஹீரோவான சூர்யா என குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது என்று இப்போதே ரசிகர்கள் புலம்பத் தொடங்கி விட்டனர்.

- Advertisement -

சற்று முன்