நடிகர் அஜீத்குமார் நடிப்பில் வருகிற ஏப்ரல் 10ம் தேதி குட் பேட் அக்லி படம் திரைக்கு வருகிறது. ஏற்கனவே டீசர் பர்ஸ்ட் சிங்கிள் செகன்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் நேற்றிரவு குட் பேட் அக்லி படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் டிரண்டிங் ஆகி வருகிறது.
இதில் அஜீத்குமார் பேசும் வசனங்களும் வில்லன் அர்ஜூன்தாஸின் வித்யாசமான கெட்டப்பும் படத்தில் வரும் ஒத்த ரூபா பாட்டும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கின்றன. குட் பேட் அக்லி படத்துக்கான முன்பதிவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விடாமுயற்சி படம் தந்த தோல்வியை நிச்சயமாக குட் பேட் அக்லி படம் மறக்க செய்துவிடும் என்று நம்பலாம்.
கடந்த 3 மாதங்களாக துபாய் பிரிட்டன் போர்ச்சுக்கல் இத்தாலி என வெளிநாடுகளில் நடந்து வரும் கார் ரேஸ்களில் நடிகர் அஜீத்குமார் பங்கேற்று வருகிறார். இதில் சில பிரிவுகளில் அவரது அணி தொடர்ந்து 3ம் இடம் பெற்று சாதனை படைத்து வருகிறது. இன்னும் அக்டோபர் மாதம் வரை இந்த கார் ரேஸ் தொடர உள்ள நிலையில், அதன்பிறகுதான் அஜீத்குமார் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார்.
இதற்கிடையே 2 நாள் பயணமாக நடிகர் அஜீத்குமார் சென்னை வந்துள்ளார். முதல் நாளில் தனது மனைவி ஷாலினி மற்றும் மகன், மகளுடன் சில இடங்களுக்கு சென்று அந்த நாளை குடும்பத்துடன் கழித்திருக்கிறார். அன்று தனது மகனுக்கு ரேஸ் கார் ஓட்டும் பயிற்சியும் அஜீத்குமார் அளித்தார். அந்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.
குட் பேட் அக்லி படத்துக்கு பிறகு நடிகர் அஜீத்குமார் நடிகர் தனுஷ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதற்காக ஏற்கனவே இருவரும் சந்தித்து பேசிய நிலையில், தனுஷ் சொன்ன 4 லைன் கதை அஜீத்குமாருக்கு மிகவும் பிடித்துப் போனதால் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க என்றும், ஏப்ரல் மாதத்தில் சென்னைக்கு வரும்போது நாம் சந்தித்து தொடர்ந்து இதுபற்றி பேசுவோம் என்றும் தனுஷிடம் கூறியிருக்கிறார்.
அதனால் சென்னைக்கு வந்துள்ள நடிகர் அஜீத்குமார், நடிகர் தனுஷ் இருவரும் நேரில் சந்தித்து பேசினார்களா, அடுத்த படத்தை தனுஷ் இயக்குவது குறித்து அஜீத்குமார் உறுதியளித்தாரா என்ற கேள்வி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. டெல்லியில் இந்தி படப்பிடிப்பில் இருந்த தனுஷ், அஜீத்குமாரை நேரில் சந்தித்தாரா என்பதும் கேள்வியாக உள்ளது. எனினும் இதில் உண்மையில் நடந்தது என்ன என்பது ஓரிரு தினங்களில் வெளிச்சத்துக்கு வரும்.





