- Advertisement -
Homeபொழுதுபோக்குசிம்பு ரஜினி படங்களை இயக்கும் வாய்ப்பை இழந்த பார்க்கிங் பட இயக்குனர் - அந்த நட்சத்திர...

சிம்பு ரஜினி படங்களை இயக்கும் வாய்ப்பை இழந்த பார்க்கிங் பட இயக்குனர் – அந்த நட்சத்திர நடிகரின் 48வது படத்தை இயக்க பிரகாசமான வாய்ப்பு!

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களின் அதீத கவனத்தை ஈர்த்து மிகப்பெரிய பாராட்டுகளை பெற்ற படம் பார்க்கிங். கடந்த 2023ம் ஆண்டில் வெளியான பார்க்கிங் படத்தை இயக்கியவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இந்த படத்தில் நாயகனாக ஹரீஷ் கல்யாண் வில்லனாக நடிகர் எம்எஸ் பாஸ்கர் நடித்திருந்தனர். இந்த படம் கார் பார்க்கிங் செய்வதை கதைக்கருவாக கொண்டு உருவாகி இருந்தது.

ஒரு காம்பவுண்ட் வீட்டில் கீழ் போர்ஷன் மேல் போர்ஷனில் வசிக்கும் 2 குடும்பங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைதான் கதைக்களம். அதாவது யாருடைய காரை காம்பவுண்ட்டுக்குள் நிறுத்துவது என்கிற ஈகோ பிரச்னைதான் இந்த படம். இதில் சிறந்த நடிப்பை தந்த எம்எஸ் பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகர் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு அற்புதமான படைப்பாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற பார்க்கிங் படத்தை தொடர்ந்து அதன் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் அவரது 49வது படத்தை இயக்க கமிட் ஆனார். இதில் நடிகர் சந்தானமும் நடிக்க ஒப்பந்தம் ஆனது. டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் எஸ்டிஆர் 49 என தற்காலிக டைட்டிலும் வைக்கப்பட்டது.

ஆனால் அமலாக்கத்துறை விவகாரத்தில் டான் பிக்சர்ஸ் இந்த படத்தை உடனடியாக தயாரிக்க முடியவில்லை. இதற்கிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடிக்க சிலம்பரசன் போய்விட்டார். இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சிம்பு படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு கதை சொல்ல அவரை டான் பிக்சர்ஸ் அனுப்பி வைத்தது.

- Advertisement -

சிம்புவுக்கு சொன்ன கதையை கொஞ்சம் ரஜினிக்கு ஏற்றது போல் ராம்குமார் பாலகிருஷ்ணன் மாற்றிய நிலையில் ரஜினிக்கும் அந்த கதை பிடித்துப் போனது. ஆனால் இந்த படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க கருதிய நிலையில் அது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படமாக மாறியதால் ராம்குமார் பாலகிருஷ்ணன் அந்த திட்டத்தி்ல இருந்து கழட்டி விடப்பட்டார்.

இந்த சூழலில் நடிகர் விக்ரம் சிவகார்த்திகேயன் ஆகியோரை சந்தித்து ராம்குமார் பாலகிருஷ்ணன் கதை சொன்ன நிலையில் விக்ரமிடம் நல்ல ரெஸ்பான்ஸ் இல்லை. எஸ்கேவுக்கு கதை பிடித்திருந்தாலும் சில ஆண்டுகளுக்கு அவர் பிஸியாக இருக்கிறார். இந்த சூழலில் நடிகர் சூர்யாவிடம் ராம்குமார் பாலகிருஷ்ணன் கதை சொல்லி இருக்கிறார். சூர்யாவிடம் கிரீன் சிக்னல் கிடைத்துள்ளது. இது விரைவில் ஓகே ஆகும் பட்சத்தில் சூர்யா நடிக்கும் 48வது படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன்தான் இயக்குவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்