- Advertisement -
Homeபொழுதுபோக்குஅன்பறிவ் இயக்கத்தில் கமல் 237 படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான முக்கிய தகவல் - ...

அன்பறிவ் இயக்கத்தில் கமல் 237 படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான முக்கிய தகவல் – இனி வசூல்ராஜா டெல்லிராஜாவாக மாறிடுவாரோ….?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்தாண்டில் வெளியான படம் இந்தியன் 2. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்த படம் பெரிய தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான படம் தக்லைஃப் படமும் தோல்வியடைந்தது. கமல் நடித்த 2 படங்களுமே அடுத்தடுத்து தோல்வியடைந்தது அவரது ரசிகர்களை விரக்தியில் தள்ளியது.

இதைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் அடுத்ததாக தனது 237வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக கமல் 237 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஸ்டண்ட் மாஸ்டர் சகோதரர்கள் அன்பறிவ் இயக்கத்தில் இந்த படம் உருவாகிறது. 3 மாதங்கள் அல்லது 4 மாதங்களில் குறுகிய கால ஆக்சன் படமாக இது தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

விக்ரம் படத்தில் நடித்த போது அன்பறிவ் மாஸ்டர்ஸ் சண்டை பயிற்சிகளை நேரில் பார்த்து வியந்த கமல்ஹதாசன், அவர்களது இயக்கத்தில் நடிக்க விரும்பி அவர்களுக்கு தானாக முன்வந்து இந்த வாய்ப்பை தந்திருக்கிறார். இது அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்கும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நாயகியாக கல்யாணி பிரியதர்சன் நடிக்கிறார்.

கமல் 237 படத்தின் ஷூட்டிங் வருகிற ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி அல்லது 10 நாட்கள் கழித்து 14ம் தேதி துவங்கும் என திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் நடிகர் கமல்ஹாசன் இன்று டெல்லியில் ராஜ்யசபா எம்பி ஆக பதவியேற்கிறார். தொடர்ந்து அவர் ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி வரை நடக்கும் பார்லிமென்ட் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.

- Advertisement -

அதனால் ஆகஸ்ட் மாதம் இறுதி வரை அவர் தமிழ்நாட்டுக்கு திரும்ப வாய்ப்பில்லை. டெல்லியிலேயே அவருக்கு ஒதுக்கப்பட்ட எம்பிக்களுக்கான அரசு விடுதியில் தங்கி, பார்லிமென்ட் கூட்டங்களில் பங்கேற்று அந்த நடவடிக்கைகளை கவனிக்க உள்ளார். மேலும் தமிழ்நாட்டு பிரச்னைகள் குறித்து பார்லிமென்ட் கூட்டத்தில் வாய்ப்பு கிடைத்தால் பேசவும் திட்டமிட்டு இருக்கிறார்.

மேலும் ஆகஸ்ட் மாத இறுதியில் அவர் தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்தாலும் செப்டம்டர் மாதம் முழுவதும் அவருக்கு பல்வேறு பணிகள் இருப்பதால், கமல் 237 படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம்தான் துவங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடித்தவர் கமல்ஹாசன். இனி டெல்லி ராஜாவாக மாறி அங்கேயே தங்கி விடுவார் போலிருக்கிறதே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்