- Advertisement -
Homeபொழுதுபோக்குதிருவண்ணாமலை முதல் நாகர்கோவில் வரை… பகத் பாசில், வடிவேல் நடிக்கும் மாரீசன் படத்தின் கதை குறித்து...

திருவண்ணாமலை முதல் நாகர்கோவில் வரை… பகத் பாசில், வடிவேல் நடிக்கும் மாரீசன் படத்தின் கதை குறித்து கசிந்த தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகர் வடிவேலு. ஆனால் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் எம்எல்ஏ கேரக்டரில் குணச்சித்திர நடிப்பில் வடிவேலு அசத்தியிருந்தார். இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் மலையாள நடிகர் பகத் பாசில் மிரட்டியிருந்தார். இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது.

இப்போது மீண்டும் பகத்பாசில் – வடிவேலு கூட்டணியில் மாரீசன் என்ற படம் உருவாகி இருக்கிறது. ஆனால் இந்த படத்தை பொருத்தவரை பகத் பாசில் கேரக்டரிலும் வடிவேலுவும் வடிவேலு கேரக்டரில் பகத்பாசிலும் மாறி நடித்தது போன்ற கதைக்களத்தில் மாரீசன் படம் உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

மாரீசன் படத்தை இயக்குனர் சுதீஷ் சங்கர் டைரக்ட் செய்து இருக்கிறார். கதை திரைக்கதை வசனம் எழுதிய கிருஷ்ணமூர்த்தி இந்த படத்தில் கிரியேட்டிவ் டைரக்டராகவும் பணியாற்றி இருக்கிறார். நடிகர்கள் பகத் பாசில் வடிவேலு ஆகியோருடன் கோவை சரளா விவேக் பிரசன்னா சித்தாரா பிஎல் தேனப்பன் லிவிங்ஸ்டன் ரேணுகா சரவண சுப்பையா கிருஷ்ணா ஹரிதா டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் மாரீசன் படத்தில் நடித்துள்ளனர்.

மாரீசன் படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். வருகிற 25ம் தேதி உலகம் முழுவதும் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. மாமன்னன் படத்துக்கு பிறகு வடிவேலு பகத் பாசில் இணைந்து நடித்துள்ள இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில் மாமன்னன் படத்தில் ஹீரோ வில்லனாக நடித்த அவர்கள் இந்த முறை வித்யாசமான கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.

- Advertisement -

இப்போது மாரீசன் படத்தின் கதைக்களம் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. பணக்காரராக இருக்கும் வடிவேலு ஏடிஎம் கார்டை பயன்படுத்தும் போது அவரிடம் உள்ள பணத்தை பகத் பாசில் பார்த்து விடுகிறார். பெரிய தொகையாக இருப்பதால் அந்த பணத்தை அபகரிக்க பகத் பாசில் முடிவு செய்கிறார்.

அந்த பணத்தை எடுப்பதற்காக, வடிவேலுவை தன்னுடைய பைக்கில் பகத் பாசில் அழைத்துச் செல்கிறார். அவரை தானே டிராப் செய்வதாகவும் கூறுகிறார். திருவண்ணாமலை முதல் நாகர்கோவில் வரை பைக்கில் இவர்கள் செய்யும் பயணமே மாரீசன் படத்தின் கதை என்று தெரிய வந்துள்ளது. இதில் வடிவேலு பணத்தை பகத் பாசில் அபகரித்தாரா, இல்லையா வடிவேலு ஏமாந்தாரா என்ற சுவாரசியமான கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்