பொல்லாதவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் வெற்றிமாறன். தனுஷ் நாயகனாக நடித்த அவரது முதல் படமே மிகப்பெரிய வெற்றியை வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தை வெற்றிமாறன் இயக்கினார். அந்த படமும் மாஸ் ஹிட் படமாக அவருக்கு அமைந்தது.
தொடர்ந்து விசாரணை வடசென்னை அசுரன் விடுதலை விடுதலை 2 ஆகிய படங்களை வெற்றிமாறன் இயக்கினார். இதில் காமெடி நடிகர் சூரியை விடுதலை படத்தில் நாயகனாக அறிமுகப்படுத்தினார். விஜய் சேதுபதிக்கும் வாத்தியார் பெருமாள் என்ற கேரக்டர், விடுதலை படம் மூலம் பெரிய இமேஜை ஏற்படுத்தி தந்தது குறிப்பிடத்தக்கது.
வெற்றிமாறன் இயக்கிய சொற்ப எண்ணிக்கை படங்களில் பெரும்பாலும் அதிகமாக நாயகனாக நடித்தது தனுஷ்தான். அதுவும் வடசென்னை படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற படமாக உள்ளது. வடசென்னை 2ம் பாகம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
கடந்த 2018ம் ஆண்டில் வெளியான வடசென்னை படத்தில் நடிகர் தனுஷூடன் இயக்குனர் அமீர் கிஷோர் சமுத்திரக்கனி டேனியல் பாலாஜி ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். இந்த படத்தின் 2ம் பாகம் விரைவில் உருவாகும் என சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் வெற்றிமாறனும் உறுதி செய்தார்.
இந்நிலையில் வடசென்னை 2ம் பாகம் குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி இயக்குனர் வெற்றிமாறன் அடுத்து நடிகர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை டைரக்ட் செய்ய உள்ளதால், வெற்றிமாறனின் உதவி இயக்குனர் ஒருவர்தான் வடசென்னை 2ம் பாகத்தை டைரக்ட் செய்யப் போகிறார் என்று கூறப்படுகிறது.
மேலும் வடசென்னை 2 படத்தில் நாயகனாக தனுஷ் நடிக்க வாய்ப்பில்லை. அவர் ஏற்கனவே பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருவதால் குட்நைட் லவ்வர் குடும்பஸ்தன் படங்களின் மூலம் வெற்றி நாயகனாக வளர்ந்து வரும் நடிகர் மணிகண்டன்தான் இந்த படத்தில் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.





