- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படப்பிடிப்பு பணிகளில் இயக்குனர் எச் வினோத் காட்டிய சீக்ரெட் - இதெல்லாம் கொஞ்சம் ஓவர்...

ஜனநாயகன் படப்பிடிப்பு பணிகளில் இயக்குனர் எச் வினோத் காட்டிய சீக்ரெட் – இதெல்லாம் கொஞ்சம் ஓவர் ப்ரோ என்று கலாய்க்கும் தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த தி கோட் படம் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளிவந்தது. அதன்பிறகு இப்போது இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற ஜனவரி 9ம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

ஜனநாயகன் படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். பிரகாஷ் ராஜ் கௌதம் மேனன் பாபி தியோல் நரேன் பிரியாமணி உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 27ம் தேதி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் கோலாகலமாக நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

- Advertisement -

கடந்த 2023ம் ஆண்டில் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி என்ற படத்தின் ரீமேக் தான் ஜனநாயகன் படமாக உருவாகிறது என்பது ஏற்கனவே உறுதியான தகவல் தான். தெலுங்கு பகவந்த் கேசரி படத்தில் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்த அதே கேரக்டரில் தான் நடிகர் விஜய் ஜனநாயகன் படத்தில் நடித்திருக்கிறார். பெண்களுக்கு குட் டச் பேடு டச் குறித்த விழிப்புணர்வுதான் இந்த படத்தில் மையக்கருவாக இருந்து உருவாகி உள்ளது.

ஜனநாயகன் படத்தின் ஆரம்பக்காட்சி, இடைவேளை காட்சி மற்றும் கிளைமாக்ஸ்க்கு முந்தைய ஃப்ரீ கிளைமாக்ஸ் காட்சிகளை மட்டுமே விஜய் நடித்த படம் என்பதால் சில மாற்றங்களை இயக்குனர் எச் வினோத் செய்து காட்சிமைப்புகளை சற்று மாற்றி எடுத்திருக்கிறார். மற்றபடி இது ஏ முதல் இசட் வரை பகவந்த் கேசரி என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் தான் என்பது ஏற்கனவே வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் நடிகர் விஜயின் கடைசி படம் இது என்பதால் ஜனநாயகன் படத்தைக் காண ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வமும் எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஜனநாயகன் படத்தின் டப்பிங் பணிகள் நடந்திருக்கின்றன. அதில் கூட்டமாக சில காட்சிகளில் ஜூனியர் ஆர்டிஸ்ட் பேச வேண்டிய காட்சிகள் நிறைய வந்துள்ளன. இதுபோன்ற மக்கள் நிறைந்த காட்சிகள் படத்தில் உள்ளன.

அதில் அவர்களுக்கு விஷூவல் காட்சிகளை காட்டினால் தான் டப்பிங் பேச வசதியாக இருக்கும். ஆனால் அப்படி விஷூவல் காட்சிகளை காட்டினால் படத்தை பற்றிய முக்கிய தகவல்கள் அவர்கள் மூலம் வெளியே கசிந்துவிடும் என்பதால் அந்த காட்சிகளை அவர்களுக்கு காட்டாமலேயே இயக்குனர் எச் வினோத் அவர்களை டப்பிங் பேச வைத்திருக்கிறார். இப்படி அவர் செய்வது படத்தின் சில காட்சிகள் வெளியே கசியாமல் தடுக்கும் நடவடிக்கை என்றாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவராக தெரியலையா? என்று தளபதி ரசிகர்கள் இயக்குனரை கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்