- Advertisement -
Homeபொழுதுபோக்குஷாலினியை, அஜீத்குமார் திருமணம் செய்ய அவரது அப்பா போட்ட வில்லங்கமான கண்டிஷன் - முகம் சுளிக்காமல்...

ஷாலினியை, அஜீத்குமார் திருமணம் செய்ய அவரது அப்பா போட்ட வில்லங்கமான கண்டிஷன் – முகம் சுளிக்காமல் அதையும் நிறைவேற்றிய அஜீத்?

- Advertisement -

இயக்குநர் சரண் இயக்கத்தில், அமர்க்களம் படத்தில் நடித்த போது நடிகர் அஜீத்குமார், ஷாலினி இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால், இந்த திருமணத்துக்கு சம்மதிக்க, ஷாலினியின் அப்பா பாபு, யாருமே எதிர்பார்க்காத ஒரு கண்டிஷனை போட்டிருக்கிறார். மற்றவர்களாக இருந்தால், நிச்சயம் இதை நிச்சயமாக மறுத்திருப்பர். ஆனால், தன் காதலுக்காக அதையும் அஜீத் செய்திருக்கிறார் என்றால், அவர் மிகப்பெரிய பண்பாளர்தான்.

கேரளாவில் உள்ள கொல்லம்தான் ஷாம்லியின் தந்தை பாபுவின் சொந்த ஊர். இளம் வயதில் அவர் நன்றாக பாடுபவர் என்பதால், சிலர் அவரை சென்னைக்கு சென்றால், சினிமாவில் நீ பாடகராகி பெரிய அளவில் வந்துவிடலாம் என ஆசை காட்டியிருக்கின்றனர். அதனால், கேரளாவை விட்டு வந்து, தன் குடும்பத்துடன் சென்னையில் குடியேறினார் பாபு.

- Advertisement -

ஆனால் அவர் நினைத்தபடி அவ்வளவு எளிதில் சினிமாவுக்குள் நுழைவதோ, பாடகர் ஆவதோ முடியாத விஷயம் என தெரிந்துவிட்டது. அதன்பின் காஸ்ட்யூம் டிசைனர் ஒருவரிடம் உதவியாளராக இருந்த அவரது வருமானத்தில், குடும்பம் மிக சிரமப்பட்டுள்ளது. இந்த சூழலில், மலையாள டைரக்டர் பாசில் இயக்கத்தில், மகள் ஷாலினி குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு ஏதேச்சையாக அமைகிறது. தொடர்ந்து அவர் மலையாளம், தமிழில் பல படங்களில் நடிக்க குடும்பம் பொருளாதாரத்தில் ந்லல நிலைக்கு வருகிறது.

ஒரு கட்டத்தில், வளர்ந்த பெண்ணாக காதலுக்கு மரியாதை படத்தில் விஜய்க்கு ஜோடியாக, ஷாலினியை அறிமுகப்படுத்துகிறார் பாசில். தொடர்ந்து பிரியாத வரம் வேண்டும், அலைபாயுதே, கண்ணுக்குள் நிலவு, அமர்க்களம் போன்ற படங்களில் ஷாலினி நடிக்கிறார். அமர்க்களம் படத்தில் நடித்த போது அஜீத்துக்கும், ஷாலினிக்கும் காதல் ஏற்படுகிறது. ஆனால் கிறிஸ்தவ மதம் சார்ந்த ஷாலினியை, அஜீத்குமார் மணப்பது பெரிய கேள்வியாக வருகிறது.

- Advertisement -

இதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு கூறுகையில், அஜீத்குமார், ஷாலினி காதல் மதத்தை கடந்து வெற்றி பெறுகிறது. இருவரது காதலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால், இதற்கு ஒரு முக்கிய கண்டிஷனை ஷாலினியின் அப்பா போடுகிறார். அதாவது, ஷாலினியை திருமணம் செய்ய, தனக்கு ஒரு கோடி ரூபாய் தர வேண்டும் என்று அஜீத்குமாரிடம் பாபு கேட்டிருக்கிறார். இவ்வளவுதானா, என்று கேட்ட அஜீத் அந்த பணத்தை சந்தோஷமாக தந்திருக்கிறார்.

இப்படி ஒரு தகவல் இருக்கிறது. இது சரியான தகவலா, உண்மையா என்பதை ஷாலினி ஏதேனும் உறுதிப்படுத்தினால்தான் உண்டு. ஆனால், இப்படிப்பட்ட ஒரு தகவல் இருக்கிறது. அஜீத், ஷாலினி திருமணம், காதல் திருமணமாக இருந்தாலும், ஜாதகம் பார்த்து 10 பொருத்தங்களும் பக்காவாக இருந்த நிலையில் அவர்களது திருமணம் நடந்துள்ளது. அவர்களது புரிதலும், அன்பும், பாசமும்தான் அவர்களது மண வாழ்க்கையை சந்தோஷமாக வைத்திருக்கிறது, என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்