தற்போது விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கக்கூடிய திரைப்படம் கோட். விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் இந்த திரைப்படம், வரும் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான இறுதி கட்டப் பணிகளில் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் ஈடுபட்டு வருகிறது.
படத்தில் விஜய் தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இதில் மகன் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய்க்கு 23 வயது இளைஞன் கதாபாத்திரம் என்பதால், வெளிநாட்டில் சென்று டிஏஜிங் முறையை கையில் எடுத்திருக்கிறார்கள் படக்குழுவினர். ஆனால் இது அவர்களுக்கு கை கொடுக்கவில்லை என்று ஸ்பார்க் பாடலை பார்த்துவிட்டு ரசிகர்களே கூறினர்.
ஆனால் இதற்கெல்லாம் படக்குழு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. சமீபத்தில் அதற்கான ட்ரெய்லரை மட்டும் வெளியிட்டது. முழுக்க முழுக்க கமர்சியல் தொகுப்பாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பது அதன் டிரைலரை பார்க்கும்போது தெரிகிறது. பாடல்களால் அதிருப்தியில் இந்த ரசிகர்கள் இந்த ட்ரெய்லரை பார்த்ததும் படத்தின் மீது சற்று நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் கமர்சியல் தொகுப்புகள் படத்தில் இருப்பது ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிய வந்துள்ளது. ஸ்பார்க் பாடலுக்கு வந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, விஜய்யின் தோற்றத்தை சற்று மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்காகத்தான் ட்ரெய்லர் வருவதில் தாமதம் ஏற்பட்டது என்றும் வெங்கட் பிரபு தெரிவித்தார்.
இப்போது நீங்கள் ட்ரெய்லரில் பார்க்கும் விஜய் தான், திரையரங்கிலும் வருவார் என்று டி ஏஜிங் முறையை அவர் விளக்கி இருந்தார். படத்தில் விஜயகாந்த் இருப்பதையும் அவர் உறுதி செய்து இருந்தார். வி எப் எக்ஸ் முறையில் அவரை திரையில் காண்பிக்க இருக்கிறார்கள். இதேபோல் படத்தில் ஒரு பாடலுக்கு த்ரிஷா நடனம் ஆடுவதும் உறுதியாக இருக்கிறது.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது வெங்கட் பிரபுவிடம், படத்தில் கெஸ்ட் ரோல் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் இருக்கலாம் என்று புதிர் போட்டார். இந்த நிலையில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மகேந்திர சிங் தோனி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தின் கிளைமாக்ஸ், ஒரு பெரிய கிரிக்கெட் மைதானத்தில் தான் நடைபெறுகிறது. அதில் சி எஸ் கே மேட்ச் நடைபெறும் என்றும் இதில் தோனி இருப்பார் என்றும் கூறுகின்றனர். இதைக் கேட்டு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.





