- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்க்கு அதை பத்தி கவலை இல்லே… எங்களுக்குதான் நேரம் சரியில்லை - புலம்பும் முன்னணி ஹீரோக்கள்...

விஜய்க்கு அதை பத்தி கவலை இல்லே… எங்களுக்குதான் நேரம் சரியில்லை – புலம்பும் முன்னணி ஹீரோக்கள் – அப்செட் ஆன ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் கடந்த 9ம் தேதி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை. இது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. குறிப்பாக தளபதி ரசிகர்களுக்கும் தவெக கட்சியினருக்கும் இது பலத்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் இந்த படம் ரிலீஸ் குறித்து உறுதியான தகவல் இல்லை.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கூறியபடி மீண்டும் இந்த படம் குறித்த விசாரணையை தனி நீதிபதி பிடி ஆஷா எடுத்து நடத்த வேண்டும். ஆனால் இந்த படம் குறித்த வழக்கை வாபஸ் பெறும் முடிவுக்கு படத்தின் தயாரிப்பு நிறுவனம் வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. எப்படியும் பிப்ரவரியில் ஜனநாயகன் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஆனால் விஜய் இதுவரை ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாதது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. படத்தின் நாயகன் அவரே எதுவும் பேசாமல் இருப்பது அரசியல் வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகன் படத்துக்காக மற்றவர்கள் குரல் கொடுக்கும் போது படத்தின் ஹீரோ விஜய் மௌனம் காப்பது நியாயம் இல்லை என்று பலரும் கூறி வருகின்றனர்.

இந்த சூழலில் வரும் பிப்ரவரி மாதம் 12ம் தேதி நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த எல்ஐகே – லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே வெளிவர வேண்டிய படம். சில கொடுக்கல் வாங்கல் பிரச்னைகளால் இந்த படம் ஓராண்டாக வெளிவராமல் இனி பிப்ரவரி மாதம் ரிலீஸ் என்கிற முடிவுக்கு வந்துள்ளது.

- Advertisement -

அதே போல் நடிகர் சூர்யா நடித்த ஆர்ஜே பாலாஜி இயக்கிய கருப்பு படமும் வருகிற பிப்ரவரி 19ம் தேதி ரிலீஸ் என்று சொல்லப்படுகிறது. இந்த படம் கடந்த தீபாவளிக்கே வர வேண்டிய படமாகும். படம் ஓடிடி விற்பனை ஆகாத நிலையில் ரிலீஸ் தள்ளிப் போய் இப்போது ஒரு வழியாக வருகிற பிப்ரவரி 19ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே நடிகர் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படமும் பல ஆண்டுகளுக்கு பிறகு வருகிற பிப்ரவரி 19ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. பல கடன் பிரச்னைகளால் இந்த படம் ரிலீஸ் முடங்கிய நிலையில் இப்போது அந்த படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு இந்த படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார். ஆனால் ஜனநாயகன் படம் ரிலீஸ் தேதி தெரியாததால் இந்த படங்கள் ரிலீஸ் செய்வதில் பெரிய குழப்பமும் சிக்கலும் நீடிக்கிறது. இந்த படங்களின் ஹீரோக்களும் அப்செட்டில் இருந்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்