சினிமா ஹீரோக்கள் எல்லாம் அரசியலுக்கு வரலாமா? கூத்தாடிகளை நம்பி என் தமிழ் சமூகம் மூளை மழுங்கி கிடக்கிறது என்றெல்லாம் தொடர்ந்து தனது கட்சி மேடைகளில் முழங்கி வருபவர் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஆனால் அவரே ஒரு திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் அவர் எல்ஐகே படத்தில் நடித்திருந்தார். இப்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் சேயோன் படத்திலும் அண்ணன் கேரக்டரில் சீமான் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா என்று கேலியும் கிண்டலுமாக பேசிய சீமான், இப்போது அரசியலில் ஜெயிக்க முடியாமல் மீண்டும் சினிமா பக்கம் தாவியிருக்கிறார் என்பதே கசப்பான உண்மை.
ஏற்கனவே தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் விட்டுச் சென்ற இடத்துக்கு வருவதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் வர முயற்சிக்கிறார் என்று தளபதி ரசிகர்கள் கடுமையாக கோபத்தில் இருந்து வருகின்றனர். அதே போல் இந்த படத்தில் விஜயை கடுமையாக விமர்சித்த சீமானும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
இந்த 2 விஷயங்களிலும் தளபதி ரசிகர்கள் கடும் கோபத்தில் இருப்பதால் சேயோன் படம் ரிலீஸாகும் போது இணையத்தில் பலமுனைகளில் இருந்தும் தாக்க துவங்குவார்கள். சமூக வலைதளங்களில் பலமுனை தாக்குதலில் இருந்து இந்த படம் தப்பிப்பதே பெரும்பாடாகி விடும் என்பதே உண்மை.
இதற்கிடையே திமுக கூட்டணியில் உள்ள ராஜ்யசபா எம்பி கமல்ஹாசன்தான் சேயோன் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் சொந்தமாக தயாரிக்கிறார். சமீபத்தில் தவெக சார்பில் முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த தமிழக எம்பிக்கள் கூட்டத்திலும் கமல்ஹாசன் பங்கேற்காமல் தவிர்த்தது விஜய் ரசிகர்களை தவெக கட்சியினரை எரிச்சலடைய செய்துள்ளது.
இப்படி சீமான் சிவகார்த்திகேயன் கமல் என 3 பேருடைய முக்கிய பங்களிப்பில் உருவாகி வரும் சேயோன் படத்தை ரவுண்டு கட்டி அடிக்க தவெக கட்சியினரும் தளபதி ரசிகர்களும் இப்போதே தயாராகி விட்டனர். இதில் தாய்கிழவி போல இன்னும் ஒரு வெற்றிப் படத்தை தந்துவிடலாம் என்று களத்தில் நிற்கும் இயக்குனர் சிவக்குமார் முருகேசன்தான் பலத்த தடுமாற்றத்தில் இருக்கிறார்.





