- Advertisement -
Homeபொழுதுபோக்குரூ. 600 கோடி பட்ஜெட்டில் சூர்யா நாயகனாக நடிக்க இருந்த கர்ணன் இந்தி படம் கைவிடப்பட்டதா?...

ரூ. 600 கோடி பட்ஜெட்டில் சூர்யா நாயகனாக நடிக்க இருந்த கர்ணன் இந்தி படம் கைவிடப்பட்டதா? சோணமுத்தா போச்சா… – கலாய்க்கும் நெட்டிசன்கள்!

- Advertisement -

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவரது நடிப்பில் பல வெற்றிப் படங்களை தந்திருக்கிறார். குறிப்பாக கஜினி, சிங்கம், சூரரைப் போற்று போன்ற சில படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மாஸ் ஹிட் படங்களான இருந்தன.

ஆனால் சமீபகாலமாக அவர் நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை. குறிப்பாக என்ஜிகே, எதற்கும் துணிந்தவன், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் மிகப்பெரிய தோல்வி படங்களாக சூர்யாவுக்கு அமைந்தன. திறமையான கலைஞராக இருந்தும் அவரது படங்கள் தோல்வியை சந்தித்து அவரது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது.

- Advertisement -

இதற்கிடையே டைரக்டர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்த சூர்யா, ஷூட்டிங் துவங்கிய ஒரே மாதத்தில் அந்த படத்தில் இருந்து திடீரென விலகிவிட்டார். இப்போது சூர்யா கேரக்டரில் அருண்விஜய் நடித்துள்ளார். வணங்கான் படம் வேற லெவலில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதே போல் சூரரைப் போற்று என்ற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில், சூர்யா நடிக்க இருந்த படமும், சூர்யாவால்தான் டிராப் ஆனது. இந்தி எதிர்ப்பை மையப்படுத்திய இந்த கதையில் நடிக்க, பல மாற்றங்களை செய்ய வேண்டும் என, சூர்யா கதையில் குளறுபடி செய்ததால் அந்த படமும் கை நழுவிப் போனது.

- Advertisement -

சென்னையில் இருந்த நடிகர் சூர்யா, மனைவி ஜோதிகாவின் விருப்பம் காரணமாக மும்பையில் குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். அங்கு ஜோதிகாவும், அவரது சகோதரி நக்மாவும், இந்தியில் நடிகர் சூர்யா நாயகனாக நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டனர். அதன்படி கர்ணன் என்ற படத்தில், சூர்யா நடிக்க கமிட் ஆனார். 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாக்க திட்டமிடப்பட்டது.

ஆனால் இப்போது லேட்டஸ்ட் தகவலாக, சூர்யா நடிக்க இருந்த இந்தி படம் கர்ணன், டிராப் செய்யப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் தென்னிந்திய நடிகரான சூர்யாவை நம்பி ரூ. 600 கோடி பட்ஜெட்டில் படம் தயாரிக்க முடியாது, ஏற்கனவே தமிழில் இவரது சில படங்கள் பிளாப் ஆனதால் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றும் அவர்கள் தரப்பில் கூறிவிட்டனர். வணங்கான், புறநானூறு படங்களை இழந்த சூர்யா, இப்போது பாலிவுட்டிலும் வாய்ப்பை இழந்து விட்டார்.

- Advertisement -

சற்று முன்