- Advertisement -
Homeபொழுதுபோக்குஅது மட்டும் இன்னும் ரகசியம்… இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்னும் மூடி மறைப்பது ஏன்? -...

அது மட்டும் இன்னும் ரகசியம்… இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்னும் மூடி மறைப்பது ஏன்? – உதவி இயக்குனர்களிடம் கூட சொல்வதில்லையாம்!

- Advertisement -

விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் ஸ்ரீ என்கிற நடிகர் ஸ்ரீராம் நடராஜன். இவர் கடந்த 2012ம் ஆண்டு வெளியான வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இந்தபடம் அவருக்கு நல்ல அறிமுகத்தை, வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது.

அதனைத் தொடர்ந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும் வில் அம்பு, மாநகரம் இறுகப்பற்று உள்ளிட்ட சில படங்களில் ஸ்ரீ நடித்தார். கடந்து 2023ம் ஆண்டு இறுகப் பற்று படத்துக்குபிறகு நடிகர் ஸ்ரீ வேறு இந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக வந்த அவர், சில தினங்களில் அங்கிருந்து வெளியேறி விட்டார்.

- Advertisement -

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படம் மாநகரம் படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் ஸ்ரீ நடித்திருந்தார். அந்த படம்தான் லோகேஷூக்கு மிகப்பெரிய அடையாளமாக தமிழ் சினிமாவில் அதிக முக்கியத்துவத்தை பெற்றுத் தந்தது. அதனால் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ஸ்ரீக்கும் மத்தியில் ஆழமான நட்பு இருந்திருக்கிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் ஸ்ரீ இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தில் அவரது மெலிந்த உருவம் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நல்ல நடிகரான அவர் ஏன் இப்படி ஆனார் என்ற கேள்வி இணையத்தில் வைரலானது. இதையடுத்து அவரை கண்டுபிடித்து மருத்துவ சிகிச்சை அளிக்க இயக்குனர் மற்றும் அவரது நண்பர் லோகேஷ் கனகராஜ் நடவடிக்கை மேற்கொண்டார்.

- Advertisement -

வட மாநிலத்தில் ஓர் இடத்தில் இருந்த நடிகர் ஸ்ரீயை கண்டுபிடித்த நிலையில், தனியாக கார் வைத்து சென்னைக்கு பாதுகாப்பாக அழைத்து வந்த லோகேஷ் கனகராஜ், அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளவும் மனரீதியாக உடல் ரீதியாக அவருக்கு ஏற்பட்ட எல்லா பாதிப்புகளையும் தீர்க்கும் விதமாக மருத்துவ சிகிச்சைகளுக்கும் ஏற்பாடு செய்தார். பிறகு அவர் நாளடைவில் குணமடைந்தும் வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், மே ஐ கம் இன் என்ற நாவலை எழுதியிருப்பதாக அறிவித்திருக்கிறார். தன்னுடைய முதல் ஆங்கில நாவலான மே ஐ கம் இன் நாவலை உலகுக்கு பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி என்றும் அதில் கூறியிருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையே ஒரு முக்கிய தகவலாக நடிகர் ஸ்ரீ இதுவரை எங்கு இருக்கிறார் என்ற தகவலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிடாமல் இருந்து வருகிறார். அவருடைய பராமரிப்பில், கவனி்பபில்தான் நடிகர் ஸ்ரீ இன்னும் இருந்து வருகிறார். தனது உதவி இயக்குனர்களிடம் கூட ஸ்ரீ இருக்கும் இடத்தை பற்றி கூறாமல் அதை ரகசியமாக லோகேஷ் கனகராஜ் வைத்திருக்கிறார். ரசிகர்கள் தொல்லையால் ஸ்ரீ பாதிக்க கூடாது என்பதுதான் இதற்கு காரணம்.

- Advertisement -

சற்று முன்