இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்த லியோ படம், அடுத்த மாதம் 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதற்கு முன்னதாக, வரும் 30ம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் 30ம் தேதி, சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடக்க இருக்கிறது. இதில் பங்கேற்க 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், தமிழகம் முழுவதும் இருந்து அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விழா நடக்கும் நாளில், நிகழ்ச்சிக்கு நடக்கும் அரங்குக்கு வெளியே, 1200 பேர் திரண்டு போராட உள்ளனர். அதுவும் விஜய்க்கு எதிராகவும், படத்தின் லோகேஷ் கனகராஜூக்கு எதிராகவும் இதில், கண்டன கோஷங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். இது மட்டும் நடந்தால் விஜய் உள்ளிட்ட படக்குழுவினருக்கே ஒரு பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தி விடுமே என்ற நிலை இப்போது உருவாகி உள்ளது.
அதாவது லியோ படத்தில் ஒரு பாடல் காட்சியில், 1200க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் பங்கேற்று நடித்து நடனமாடி இருக்கின்றனர். இதில் முறையான நடன பயிற்சி பெற்றவர்கள், நடனத்தில் ஆர்வம் இருப்பவர்கள் என, அனைவரையும் களத்தில் இறக்கி விட்டுள்ளனர். சில தினங்கள் நடந்த இந்த பாடல் படப்பிடிப்பு காட்சிக்காக, தலா ஒருவருக்கு 20 ஆயிரம் வரை சம்பளம் தர வேண்டியுள்ளதாம்.
இந்நிலையில், லியோ படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிந்த நிலையில், இதுவரை அவர்களுக்கு அந்த சம்பளம் வழங்கப்படவில்லை. பலமுறை கேட்டும் கிடைக்கவில்லை. அந்த 1200 பேரை, பாடல் காட்சிக்கு ஏற்பாடு செய்த மீடியேட்டர்கள் இவர்களுக்கான சம்பள தொகை ரூ. 20 லட்சம் வரை, அபேஸ் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
வரும் 30ம் தேதிக்குள் எங்களுக்கான சம்பளம், வங்கி கணக்கில் வந்து சேரவேண்டும், அதுவரை காத்திருப்போம். அப்படி வராவிட்டால் வரும் 30ம் தேதி, இசை வெளியீட்டு விழா நடக்கும் நேரு ஸ்டேடியம் முன்பு கோஷங்களை எழுப்பி, போராட்டம் நடத்தி நமக்கான சம்பளத்தை பெறுவோம் என, அந்த பாடல் காட்சியில் நடித்த 1200 பேரும் முடிவு செய்துள்ளனர்.
இதுமட்டுமின்றி, இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்க தமிழகம் முழுவதும் டிக்கெட் அனுப்பப்பட்டுள்ளது. அவற்றை சில நிர்வாகிகள் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம், விஜயை நேரில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்களுக்கு விற்று வருவதாகவும் தகவல் பரவியுள்ளது. கடந்த முறை வாரிசு படத்தின் இசை வெளியீட்டின் போதும், சிலர் இப்படி டிக்கெட்டுகளை விற்று காசு பார்த்ததாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.





