- Advertisement -
Homeபொழுதுபோக்குவிரைவில் தமிழ் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் - படத்தோட ஹீரோ...

விரைவில் தமிழ் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் – படத்தோட ஹீரோ யார் தெரியுமா? – போட்றா வெடிய!

- Advertisement -

ஹாலிவுட் சினிமாவில் அதிரடி ஆக்சன் ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ஜாக்கிசான். கடந்த 1980 90களில் ஜாக்கிசான் நடித்த படங்கள் எல்லாம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றவை. ஜாக்கிசான் படங்கள் என்றாலே அதில் காமெடி கலந்த சண்டை காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடும்.

அதே நேரத்தில் மற்ற ஆங்கில படங்களை போல ஜாக்கிசான் படங்களில் முத்தக்காட்சிகள், படுக்கையறை காட்சிகள் பெரும்பாலும் இருக்காது. அதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்களை வரை ரசித்து பார்க்கும்படியாக படங்களாக மட்டுமே அவை இருக்கும். அத்துடன் ஜாக்கிசான் தனது படங்களில் டூப் போட்டு நடிக்க மாட்டார்.

- Advertisement -

எவ்வளவு ரிஸ்க் ஆன சண்டை காட்சியாக இருந்தாலும் அவரே நடிப்பார். அதனால் பலமுறை அவருக்கு படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. பலமுறை மிக மோசமாக காயம்பட்டிருக்கிறார். அவரது உடலில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. அந்த அளவுக்கு தனது உயிரை பணயம் வைத்து நடிக்கும் ஒரு நடிகராக தான் ஜாக்கிசான் இருந்து வருகிறார்.

இதற்கிடையே சில தினங்களுக்கு முன் தனது 3400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை ஏழை மாணவர்களின் கல்விக்காகவும் இயற்கை பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காகவும் ஜாக்கிசான் சாரிட்டபிள் பவுண்டேசன் மூலம் நன்கொடையாக ஜாக்கிசான் வழங்கியிருக்கிறார். தனது சொத்துக்களை இப்படி தானமாக வழங்கிய ஜாக்கிசானின் பெருந்தன்மையை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் ஜாக்கிசான் மிக விரைவில் தமிழ் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் சிலம்பரசன் இப்போது பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் எஸ்டிஆர் 49 என்ற படத்தில் நடிக்கிறார். அடுத்து எஸ்டிஆர் 50 படத்தை தேசிங்கு பெரியசாமியும், எஸ்டிஆர் 51 படத்தை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவும் டைரக்ட் செய்ய இருக்கின்றனர்.

இதையடுத்து நடிகர் சிலம்பரசன் நடிக்கும் 52வது படத்தை 2018 என்ற மலையாள படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி டைரக்ட் செய்ய இருக்கிறார். இந்த படத்தில்தான் நடிகர் சிம்புடன் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மிக விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை நடிகர் சிம்புவே வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்