- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 படம் இசை வெளியீட்டு விழா, மலேசியாவில் மிக பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகளை செய்த...

ஜெயிலர் 2 படம் இசை வெளியீட்டு விழா, மலேசியாவில் மிக பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகளை செய்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் – ரஜினி சொன்ன அந்த ஒரு வார்த்தை…!

- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் கடைசியாக வெளியானது. இந்த படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் வணிக ரீதியாக லாபத்தை கொடுத்தாலும் விமர்சன ரீதியாக கூலி படம் மிகப்பெரிய ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு தந்தது.

ஏனென்றால் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் அனிருத் கூட்டணியில் உருவான கூலி படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை பெறும். குறிப்பாக தமிழ் சினிமாவில் இதுவரை எந்த படமும் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டாத நிலையில் கூலி படம் அந்த சாதனையை நிகழ்த்திக் காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பலத்த ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த சூழலில் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வரும் செப்டம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில் ஜெயிலர் 2 படத்தை மிகப்பெரிய அளவில் பிரமோஷன் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அதற்காக ஜெயிலர் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடந்த அதே அரங்கத்தில் மிக பிரமாண்டமாக நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக மலேசியாவில் இதுபோன்ற சினிமா விழாக்களை சிறப்பாக நடத்தி வரும் தலைமை நிர்வாகி மாலிக் என்பவரை சென்னைக்கு வரவழைத்து சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தரப்பில் அதிகாரிகள் சந்தித்து பேசி உள்ளனர்.

அவர் நடிகர் ரஜினிகாந்தையும் நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். ஆனால் இப்போது வந்த லேட்டஸ்ட் தகவலின் படி ஜெயிலர் 2 படத்தில் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த வேண்டாம் என்று ரஜினிகாந்த் கட் அண்ட் ரைட்டாக கூறிவிட்டார். இதற்கு முக்கிய காரணம் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடத்தப்பட்டதால் நாமும் அங்கே ஜெயிலர் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தினால் விஜய்க்கு போட்டியாக நடத்துகிறோம் என்ற ஒரு அவப்பெயர் ஏற்பட்டு விடும்.

மேலும் அந்த நிகழ்ச்சிக்கு வந்த கூட்டத்தையும் இந்த நிகழ்ச்சிக்கு வரும் கூட்டத்தையும் ஒப்பிட்டு இணையத்தில் தாறுமாறாக விமர்சனம் செய்வார்கள். இதுவே படத்துக்கு நெகட்டிவ் ஆன தோற்றத்தை உருவாக்கி விடும். இது தேவையில்லாமல் நமக்கும் படத்துக்கும் கெட்ட பெயரை உருவாக்கும். எனவே ஜெயிலர் 2 பட விழாவை மலேசியாவில் நடத்த வேண்டாம். சென்னையிலேயே வழக்கம் போல் நடத்தி விடலாம் என்று நடிகர் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் உறுதியாக கூறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்