- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்யால்தான் அவரது மகன் இயக்குநர் ஆனார்.. பற்றவைத்த தயாரிப்பாளர்

விஜய்யால்தான் அவரது மகன் இயக்குநர் ஆனார்.. பற்றவைத்த தயாரிப்பாளர்

- Advertisement -

விஜய்க்கு சஞ்சய் என்ற மகன் இருக்கிறார். வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற நா அடிச்சா தாங்க மாட்ட பாடலின் கடைசியில் விஜய்யுடன் தோன்றியிருந்தார். அதனையடுத்து ஜேசன் சஞ்சய் கண்டிப்பாக நடிகராக வருவார் என ஆரூடம் கூறப்பட்டது. ஆனால் அந்த ஆரூடத்தை அடித்து நொறுக்கும் விதமாக இயக்கத்திற்கு சம்பந்தமான படிப்பை கனடாவிலும், லண்டனிலும் படித்தார் சஞ்சய்.

சில மாதங்களுக்கு முன்பு அவர் புல் தி ட்ரிக்கர் என்ற குறும்படத்தை இயக்கினார். அந்தப் படத்தின் மேக்கிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சஞ்சய் இவ்வளவு வளர்ந்துவிட்டாரே; இயக்குநர் கலை முகத்தில் தாண்டவமாடுகிறது. கண்டிப்பாக விரைவில் விஜய்யை வைத்து திரைப்படம் இயக்குவார் என ஆர்வத்துடன் பேச ஆரம்பித்தனர்.

- Advertisement -

இந்தச் சூழலில் திடீர் ட்விஸ்ட்டாக ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார் என்று சில நாட்களுக்கு முன்பு லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் படத்தின் ஹீரோ விஜய் இல்லை. அதேசமயம் வேறு யார் படத்தில் ஹீரோ என்பது குறித்தும் தகவல் வெளியாகவில்லை. அநேகமாக விஜய் சேதுபதியோ இல்லை ஜீவாவோ படத்தில் ஹீரோவாக நடிக்கலாம் என கூறப்படுகிறது.

சஞ்சய் இயக்குநரானதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்தாலும் ஒரு தரப்பினர் கடுமையாக விமர்சிக்கின்றனர். கோடம்பாக்கத்திலும், வடபழனியிலும் கையில் சிறந்த கதையோடு பல வருடங்களாக இயக்குநர் ஆவதற்கு பலர் அலைந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் விஜய்யின் மகன் என்ற ஒரே தகுதியால் மட்டுமே சஞ்சய் இயக்குநர் ஆகியிருக்கிறார். இது நெப்போடிசம் என்று ஓபனாக கூற ஆரம்பித்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் அளித்த பேட்டி ஒன்றில், “விஜய் மகன் சஞ்சய் இயக்குநராக வருவது மகிழ்ச்சியான செய்தி. லண்டனில் அவர் சினிமா பற்றி படித்திருக்கிறார். 18 வயதிலேயே இயக்குநராகிவிட்டார். இதில் தவறு எதுவுமே இல்லை. அரசியலில் வாரிசு வந்தால்தான் திட்டுறீங்க. சினிமாவில் வாரிசு வந்தாலுமா திட்டுவீர்கள்.அதில் தவறே இல்லை.கலை உலகத்துக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.

விஜய் தனது தந்தையால் நடிகரானார். ஆரம்பத்தில் அவர் நடித்த இரண்டு படங்களும் தோல்விதான். அப்போது உச்சத்தில் இருந்த விஜயகாந்த்துடன் செந்தூரப்பாண்டி படத்தில் அவருடைய தம்பியாக நடித்து பிரபலமானார் விஜய். அப்போதும் அவரை வைத்து படம் எடுக்க யோசித்தார்கள். ஆனால் விடாத எஸ்.ஏ.சி பல தயாரிப்பாளர்களிடம் சென்று பேசி விஜய்யை பெரிய நடிகராக்கினார். விஜய் இப்போது தமிழ் சினிமாவில் நம்பர் ஒன்னாக இருக்கிறார்.

விஜய்யால்தான் அவரது மகன் இயக்குநர் ஆனாலும் நல்ல கதைகளை யோசித்து அதில் நல்ல ஹீரோவை நடிக்க வைத்து படம் எடுக்க வேண்டும். அதைவிட முக்கியம் எடுப்பதை மக்களுக்கு பிடித்தது போல் விருந்து வைக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் அவரை கொண்டாடுவார்கள். விஜய் மகன் பெரிய ஆளாக வர வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

- Advertisement -

சற்று முன்