கடந்த 2023ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இசையமைத்து இருந்தார். படையப்பா படத்துக்கு பிறகு ரம்யா கிருஷ்ணன் இந்த படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்திருந்தார்.
சுமாரான வெற்றிப் படங்களால் சோர்ந்து போயிருந்த நடிகர் ரஜினிகாந்துக்கு ஜெயிலர் படத்தின் மாஸ் வெற்றி பெரிய கம்பேக் ஆக இருந்தது. 600 கோடி ரூபாய் வரை இந்த படம் வசூலை அள்ளியதால் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினி அனிருத் மற்றும் நெல்சன் ஆகியோருக்கு சொகுசான விலை உயர்ந்த கார்களை பரிசளித்து கவுரவித்தார்.
ஜெயிலர் படத்தில் நடிகர்கள் மோகன்லால் சிவராஜ்குமார் ஜாக்கி ஷெராப் போன்றவர்கள் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். மேலும் வில்லனாக மலையாள நடிகர் விநாயகன் நடிப்பு வேற லெவலில் இருந்தது. இந்த படத்தில் அவர் வரும் காட்சிகளும் அவரது மிரட்டலான நடிப்பும் டயலாக் டெலிவரியும் இந்த படத்தின் வெற்றிக்கு பெரிய அளவில் பலத்தை கொடுத்தது.
மேலும் தமன்னா போட்ட காவலய்யா குத்தாட்டமும் படத்துக்கு அதிக வரவேற்பை பெற்றுத் தந்தது. மிர்ணாள் தாகூர் வசந்த் ரவி யோகிபாபு சரவணன் அறந்தாங்கி நிஷா கிஷோர் மாரிமுத்து சுனில் ரெடின் கிங்ஸி என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது. இந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகு இப்போது ஜெயிலர் 2 படம் உருவாகி உள்ளது.
வருகிற ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் 2 படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்திலும் ரஜினி ரம்யாகிருஷ்ணன் மிர்ணாள் தாகூர் உட்பட மோகன்லால் சிவராஜ்குமார் நடிகர் பவன் கல்யாண் பாலய்யா உள்ளிட்ட சில நடிகர்கள் நடிப்பதாக தெரிகிறது. குறிப்பாக சந்தானம் எஸ்ஜே சூர்யா விஜய் சேதுபதி போன்றவர்களும் ஜெயிலர் 2 படத்தில் நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தின் டிஜிட்டல் உரிமத்தை முன்னணி ஓடிடி நிறுவனம் அமேசான் பிரைம் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது. மொத்தம் 160 கோடி ரூபாய்க்கு இந்த படம் விலை பேசப்பட்டு அமேசான் பிரைம் ஓடிடி தளம் வாங்கியுள்ளது. தமிழில் மிக அதிக விலைக்கு ஜெயிலர் 2 படம் டிஜிட்டல் விற்பனை நடந்திருப்பது சூப்பர் ஸ்டார் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.





