- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் படத்தில் தவறவிட்ட அந்த டயலாக் என்ன? உண்மையை உடைத்த நடிகர்.. உண்மையிலேயே மாஸ் சீன்...

ஜெயிலர் படத்தில் தவறவிட்ட அந்த டயலாக் என்ன? உண்மையை உடைத்த நடிகர்.. உண்மையிலேயே மாஸ் சீன் தான்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாபிக் என்னவென்றால் அது கண்டிப்பாக ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படமாகத்தான் இருக்கும். நெல்சன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கதையைத் தாண்டி ரஜினிக்கே உண்டான மாஸ் காட்சிகள் படத்தில் அதிகம் இருப்பதால் இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரஜினி மட்டுமல்லாது கன்னட பிரபலம் சிவராஜ்குமார், மலையாள நட்சத்திரம் மோகன்லாலையும் செம மாஸாக காட்டியிருக்கிறார் இயக்குனர் நெல்சன். அதுவும் கிளைமாக்ஸ் காட்சியில், ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால் என ஒவ்வொருவரையும் தனித்தனியாக காட்டி, காட்சிக்கான விறுவிறுப்பைக் கூட்டியதால் ரசிகர்கள் இதனை விசில் பறக்க கொண்டாடி வருகின்றனர்.

இதன் காரணமாக தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ஜெயிலர் திரைப்படம் வசூல் மழையை குவித்து வருகிறது. முன்பதிவில் தொடங்கி தற்போது வரை வசூல் அதிகரித்துக் கொண்டே இருப்பதாக சினிமா விநியோகஸ்தர்கள் கூறி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.

வியாழன், வெள்ளி மற்றும் சனி ஆகிய மூன்று நாட்களையும் சேர்த்து ஜெயிலர் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 65 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ஜெயிலர் படப்பிடிப்பின் போது துணை நடிகர் ஒருவருடன் ரஜினி எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் ரஜினி ஜெயிலர் கெட்டப்பில் வர, துணை நடிகர் ஒருவருக்கு முக்கியமான டயலாக்கை கொடுத்து இருக்கிறார் நெல்சன். ஆனால் அந்த நபர் சூட்டிங்கின் போது அதிகம் டேக் வாங்கியதால், அவரை படத்தில் இருந்து நீக்கிவிடலாம் என்று நெல்சன் முடிவு செய்து இருக்கிறார். இதை அறிந்த ரஜினிகாந்த் நெல்சனின் உதவி இயக்குனர்களிடம், ஜெயிலர் படத்தில் நடிப்பதாக அந்த நபர் வீட்டில் இருப்பவர்களிடம் ஆசை ஆசையாக கூறியிருப்பார். இப்போது அவரை நீக்கி விட்டால் அனைவரும் ஏமாற்றம் அடைந்து விடுவார்கள்.

இதனால் நான் அந்த நபர் மீது கை போட்டு நின்று கொள்கிறேன். நீங்கள் காட்சி எடுங்கள் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அந்த துணை நடிகர் சீனிவாசன் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில், ரஜினியை அருகில் பார்த்ததால் பேச்சற்று போய்விட்டதாக கூறியிருக்கிறார். மேலும் நெல்சன் தனக்கு, ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா பாடலில், கோட்டையில்லை கொடியும் இல்லை இப்பவும் நீ ராஜா என்று பாட சொல்லியதாகவும், ஆனால் சூப்பர் ஸ்டாரை பார்த்த பிரமிப்பில் எனக்கு டயலாக் கூற முடியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்